சும்மாவே ரணகளமா இருக்கும்.. இது வேற லெவலா இல்ல இருக்கு.. வைரலாகும் பிரபல நடிகையின் 'வாவ்' ஸ்டில்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள மிரட்டும் ஸ்டில்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
சோசியல் மீடியாதான் உலகம் என்றாகிவிட்டது இப்போது. பெரும்பாலானவர்கள் அதில்தான் உருண்டு புரண்டு கொண்டிருக்கிறார்கள்.
இந்த கொரோனா காலத்தில், இதைப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. சில நடிகர், நடிகைகள் இதற்கு கிட்டதட்ட அடிமையாகவே மாறிவிட்டார்கள்.

புகைப்படங்கள்
தங்களது நடனம், ஒர்க் அவுட் மற்றும் போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி பதிவு செய்து வருகின்றனர். நடிகைகள் தினமும் புதிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். படப்பிடிப்புகள் இல்லாததால், இதை ஒரு வேலையாகவே செய்து வருகின்றனர். இதற்கு கிடைக்கும் லைக்ஸ் மற்றும் கமென்ட்களில் மொத்தமாக விழுந்து கிடக்கிறார்கள்.

கவர்ச்சி போஸ்
அதிக லைக்ஸ், கமென்ட் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். சில நடிகைகள் கன்னாபின்னாவென கிளாமர் போஸ் கொடுப்பதை தொழிலாகவே வைத்து விட்டார்கள். பிகினி, குட்டைப் பாவாடை, முன்னழகு தெரியும்படியான கவர்ச்சி போஸ் என விதவிதமான புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில், இஷா குப்தாவும் ஒருவர்.

காமாண்டோ 2
இவர், தமிழில் பிரபு, கிஷோர் நடித்த யார் இவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஜன்னத் 2, ரஸ்டம், பாட்ஷாவோ, காமாண்டோ 2, ராஸ் 3 உட்பட பல பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். மாடலிங்கிலும் ஆர்வம் உள்ள இஷா குப்தா, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார்.

லாக்டவுன் நேரத்தில்
ஸ்பெயினைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவல் கம்போஸ் குவால்லார் என்பவரை காதலித்து வரும் இஷா, கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் இப்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள், செம கிளாமராக இருக்கின்றன.

ஏஞ்சலினா ஜோலி
இதற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளித்துள்ளனர். தங்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர். ஒருவர், அமெரிக்காவுக்கு ஒரு ஏஞ்சலினான்னா, நம்ம ஊருக்கு ஒரு இஷா என்று கூறியுள்ளார். பலர் அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். ஒருவர் கொஞ்சம் ஓவராகவே போய், இந்த உலகத்துலயே நீங்கதான் செம அழகு என்று கூறியுள்ளார்.

கன்னாபின்னா வைரல்
இன்னும் சிலர் உங்களுக்கு அருமையான டிரெஸிங் சென்ஸ் என்றும் சூப்பரா இருக்கு என்றும் புகழ்ந்துள்ளனர். இதுதான் கில்லர் லுக் என்று சிலர் கூற, உங்களையேதான் பார்த்துட்டு இருக்கேன். கண்ணை கீழ இறக்க முடியலை என்று ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த போட்டோஸும் வழக்கம் போல கன்னாபின்னா வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











