இப்படி எழுந்திரிக்கணும்னு நினைக்கிறேன்.. ஆனால்.. இஷா குப்தா போட்ட செம Expectation vs Reality
மும்பை: தினமும் காலையில் இப்படி எழுந்திரிக்கணும்னு நினைக்கிறேன், ஆனால், இப்படித் தான் எழுந்திரிக்க முடிகிறது என நடிகை இஷா குப்தா பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Recommended Video
ரஸ்டம், கமாண்டோ 2, ஜானத் 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை, சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார்.
சமீபத்தில் பேன்ட் ஜிப்பை கழட்டி விட்டபடி அவர் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தை சூடேற்றியது.

யோகா
இஷா குப்தா அளவுக்கு இந்திய நடிகைகளில் யாரும் யோகா மற்றும் உடற்பயிற்சிகளை செய்வார்களா? என்கிற அளவுக்கு கஷ்டமான யோகாக்களை எல்லாம் சர்வ சாதாரணமாக தினமும் செய்து, அதன் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை இஷா குப்தா. உடம்பை வில்லாக வளைத்தபடி வித விதமான யோகாக்களை செய்வதில் இவர் கில்லாடி.

பூமி தினம்
பூமி தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், அது குறித்த ஒரு விழிப்புணர்வு வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராமில் நடிகை இஷா குப்தா பகிர்ந்திருந்தார். "நாம் இந்த உலகத்தை முன்னோர்களிடம் இருந்து பெறவில்லை. நம் அடுத்த தலைமுறையினரிடம் இருந்து கடனாக பெற்றுள்ளோம். அதனை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்" என பேசியுள்ளார்.

இதயமும் பூமியும்
மற்றொரு பதிவில் Heart மற்றும் Earth என்கிற இரண்டு சொற்களுக்கும் ஒரே மாதிரியான எழுத்துக்கள் தான் என்ற சூப்பரான கண்டுபிடிப்பை கண்டுபிடித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு பாராட்டுக்களை அள்ளியுள்ளார். இஷா குப்தா நடிப்பில் விரைவில் REJCTX 2 என்ற வெப்சீரிஸ் ஜீ5 ஸ்ட்ரீமிங் தளத்தில் வெளியாக விருக்கிறது.

குரங்கு மாதிரி
தினமும் தூங்கி எழும் போது, அனைவரும் இப்படி தேவதையை போல அழகாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால், நிதர்சனம் என்ன வென்றால், பலரும் இப்படி குரங்கு போலத் தான் காலையில் எழுந்திரிப்பார்கள் என குரங்கு ஒன்றின் புகைப்படத்தை போட்டு, இணையத்தையே சிரிப்பலையில் உற்சாகப்படுத்தியுள்ளார்.

இப்படி ஓப்பனா சொல்லிட்டீங்க
பாலிவுட், டோலிவுட் என கலக்கி வரும் நடிகை இஷா குப்தாவின் இந்த Expectation vs Reality பதிவை பார்த்த பல பிரபலங்களும், என்ன இப்படி உண்மையை ஓப்பனா போட்டு உடைச்சிட்டீங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர். இஷா குப்தாவின் இந்த பதிவை பார்த்த அவரது ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











