For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜானி வாக்கர் சரக்கில் புது ரெசிபி.. சரக்கும் கையுமா நடிகை போட்ட போட்டோ.. வாய் பிளக்கும் குடிமகன்ஸ்!

  |

  மும்பை: பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா, சரக்கும் கையுமாக ஷேர் செய்துள்ள போட்டோ குடிமகன்களை குஷியாக்கி உள்ளது.

  கணவர் எப்போதும் போனில் பிசி.. கடுப்பில் அந்த மொழியை கற்றுக்கொண்ட நடிகை - வீடியோ

  யோகா புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை ஆரோக்கிய வழியில் கொண்டு சென்ற இஷா குப்தா என்ன திடீரென இப்படி மாறிட்டாரே? என்கிற கேள்வி ஏகப்பட்ட ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளன.

  அவர் பக்கத்தில் இருக்கும் இரு பப்பி குட்டிகளை பார்த்த நெட்டிசன்கள், பாவம் அவை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

   'நான் போதை அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ! 'நான் போதை அடிமையா இருந்தேன்..' திடீரென வைரலாகும் நடிகை கங்கனாவின் வீடியோ!

  பான் இந்திய நடிகை

  பான் இந்திய நடிகை

  யார் இவன் எனும் தமிழ் படம், வீடெவ்வெடு எனும் தெலுங்கு படம் மற்றும் ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் நடித்து தான் ஒரு பான் இந்திய நடிகை என நிரூபித்துள்ளார் நடிகை இஷா குப்தா. கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான டோட்டல் தமால் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

  லவ் பிகினி

  லவ் பிகினி

  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ஹாட்னஸ் ஆன புகைப்படங்களை பதிவிட்டு தெறிக்கவிடும் நடிகை இஷா குப்தா, சமீபத்தில், ஐ லவ் யூ என பிரின்ட் செய்யப்பட்ட பிகினியை அணிந்து கொண்டு போஸ் கொடுத்து இளைஞர்களை அதிர வைத்திருந்தார். மற்றவர்களை நேசிப்பதை விட நம்மை நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என தத்துவமும் பொழிந்தார்.

  அதில் ஆர்வம் அதிகம்

  அதில் ஆர்வம் அதிகம்

  கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு கலங்கடிப்பது மட்டுமின்றி வித விதமான ரிஸ்க்கான யோகாக்களை செய்து அசத்துவதில் இந்த ரஸ்டம் நாயகிக்கு ஆர்வம் அதிகம். இவர் வெளியிடும் யோகா புகைப்படங்களை தினமும் பார்த்தாலே போதும், நாமும் யோகாவை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை அத்தனை பேருக்கும் ஈசியா வந்து ஒட்டிக் கொள்ளும்.

  சரக்கும் கையுமாக

  சரக்கும் கையுமாக

  இப்படி யோகா டீச்சராக இருந்து இளைஞர்களை நல்வழிப் படுத்தி வருகிறாரே என்று பார்த்தால், சரக்கும் கையுமாக இவர் இப்போ கொடுத்துள்ள ஹாட் போஸ் போட்டோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது. அதிலும், ஜானி வாக்கர் சரக்கை வைத்து புது ரெசிபி ஒன்றை எப்படி செய்வது என இவர் கொடுத்துள்ள அடடே விளக்கம் வேற லெவல்.

  ஜானி ஜிஞ்சர்

  ஜானி ஜிஞ்சர்

  50 மில்லி ஜானி வாக்கர், 120 மில்லி இஞ்சி சாறு, ஒரு பீஸ் ஆரஞ்சு பழம் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி குடித்தால், மூளை மூலாதாரத்தை தொட்டு விட்டு வரும் என்கிற ரேஞ்சுக்கு புது ரெசிபி ஒன்றை கூறியுள்ள இவரை பார்த்து, குடிமகன்கள் நன்றி சொல்லி வருகின்றனர். சிலர், நீங்களும் நம்ம இனம் தானா? என தோஸ்த்தானாவும் கொண்டாடி வருகின்றனர்.

  பாவம் அந்த நாய்க்குட்டிகள்

  பாவம் அந்த நாய்க்குட்டிகள்

  சரக்கடித்து விட்டு தெருவில் படுத்துக் கிடக்கும் தேவதாஸ் தனது பக்கத்தில் நாய்க்குட்டிகளை வைத்திருப்பது போல, சரக்கடிக்கும் இஷா குப்தாவின் இரு புறங்களிலும் இரு நாய்க்குட்டிகள் பாவமாக படுத்து இருக்கின்றன. பீட்டா, ப்ளூ க்ராஸ் யாராவது அவற்றை காப்பாற்றுங்கள் என சில நெட்டிசன்கள் கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர்.

  போதைப் பொருள்

  போதைப் பொருள்

  ஏற்கனவே நடிகை ரியா சக்கரவர்த்தி கைதுக்கு அப்புறம் பாலிவுட் நடிகைகளான சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டவர்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இப்போ இப்படி நீங்க ஓப்பனா சரக்கடிக்கும் புகைப்படங்களை போடுவதை பார்த்தால், லிஸ்டில் உங்களையும் சேர்த்திட போறாங்க, உஷாரா இருங்க எனவும் சில நெட்டிசன்கள் கோர்த்து விட்டு வருகின்றனர்.

  English summary
  Pan India actress Esha Gupta shares her Johnny Walker new recipe with her fans and makes it as a viral one. Her instagram fans shocked after watching the yoga teacher with alcohol.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X