பிகினி உடையில் காதலருடன் செம ஜாலி.. ரசிகர்களுக்கு இப்படியொரு கவர்ச்சி விருந்து கொடுத்த இஷா குப்தா!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகை இஷா குப்தா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து நடந்து வரும் வீடியோவை அவரது காதலர் எடுத்து வெளியிட்டு இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
ஜானத் 2 எனும் பாலிவுட் படம் மூலம் 2012ல் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை இஷா குப்தா.
தமிழில் கடந்த 2017ல் வெளியான யார் இவன் படத்திலும் இஷா குப்தா நடித்துள்ளார். தெலுங்கில் வெளியான வீடெவ்வடு படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் ஹாட் நடிகை
ஜானத் 2, ராஸ் 3டி என பாலிவுட்டின் ஹாட் நடிகையாக அறிமுகமான இஷா குப்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வருகிறார். உடம்பை வில்லாக வளைத்து யோகாக்கள் செய்வதிலும் இவர் பலே கில்லாடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஓடிடியில் கவனம்
பாலிவுட் படங்களில் நடித்து வரும் இஷா குப்தா ஓடிடியில் வெளியாகும் ஹாட் வெப்சீரிஸ்களிலும் சமீப காலமாக அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். ரிஜெக்ட் எக்ஸ் வெப்சீரிஸில் 2020ம் ஆண்டு நடித்த இஷா குப்தா, மல்லிகா ஷெராவத் உடன் இணைந்து 2021ல் நகாப் எனும் வெப்சீரிஸில் செம ஹாட்டாக நடித்தார். கடந்த ஆண்டு வெளியான ஆஷ்ரம் சீசன் 3லும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து ஓடிடி ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

ஸ்பெயின் தொழிலதிபருடன் காதல்
37 வயதாகும் நடிகை இஷா குப்தா ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மானுவேல் காம்பஸ் கல்லார் என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார். அடிக்கடி காதலருடன் படு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வரும் இஷா குப்தா, காதலர் தின கொண்டாட்ட வீடியோவையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

காதலருடன் கொண்டாட்டம்
ஆண்டு முழுவதுமே ஏகப்பட்ட நாட்களில் தனது காதலருடன் காதலை கொண்டாடி வரும் நடிகை இஷா குப்தா காதலர் தினத்தன்று சும்மா விடுவாரா.. சொகுசு ரெசார்ட் ஒன்றில் காதலருடன் நீச்சல் குளத்தில் குளித்து கும்மாளம் போட்டுள்ளார். இந்நிலையில், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருந்து சொட்டச் சொட்ட இஷா குப்தா நடந்து வரும் வீடியோ அவரது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி உள்ளது.

காதலர் எடுத்த வீடியோ
நீச்சல் குளத்தில் இருந்து பிகினி உடையில் நடந்து வந்து காதலர் முன்பாக குனிந்து டவலை எடுத்து துவட்டும் இஷா குப்தாவின் காட்சிகளை வீடியோவாக எடுத்து இஷா குப்தா இன்ஸ்டா பக்கத்திலேயே வெளியிட்டது அவரது காதலர் தான் என்கின்றனர். இஷா குப்தாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டிலும் வித் லவ் என்றே குறிப்பிட்டுள்ளார்.

லவ்வர்ஸ் டே விருந்து
காதலர் தினத்துக்கு காதலருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கும் இப்படியொரு லவ்வர்ஸ் டே விருந்து கொடுக்க உங்களுக்குத்தான் பெரிய மனசு இருக்கு இஷா குப்தா என பாலிவுட் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி ஜொள்ளு விட்டு வருகின்றனர். நொடிப் பொழுதில் அந்த வீடியோ முடிவடையும் நிலையில், பல முறை அதை ரிப்பீட் மோடில் திரும்ப திரும்ப போட்டும், வீடியோவை டவுன்லோடு செய்து ஜூம் செய்து பார்த்தும் பாலிவுட் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











