“மகாலட்சுமியின் கணவரோடு ஜெயஸ்ரீக்கு தொடர்பு உள்ளது”.. பிளேட்டை அப்படியே மாற்றி போட்ட நடிகர் ஈஸ்வர்!

நடிகை ஜெயஸ்ரீ கூறிய புகார்கள் அனைத்தும் பொய் என அவரது கணவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

மஹாலட்சுமி கணவருக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு |Eswar Press Meet | Jayasree Eswar | FILMIBEAT TAMIL

சென்னை: தனது மனைவி ஜெயஸ்ரீயும், மகாலட்சுமியின் கணவர் சேர்ந்து கொண்டு தன்னை குறிவைத்து தாக்குவதாக நடிகர் ஈஸ்வர் ரகுநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கல்யாணப் பரிசு, ராஜா ராணி உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத். கடந்த சில வருடங்களுக்கு முன் இவர் சின்னத்திரையில் நடன இயக்குனரும், நடிகையுமான ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டார்.

சில தினங்களுக்கு முன்னர் ஈஸ்வர் தன்னை கடுமையாக தாக்கியதாக ஜெயஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஈஸ்வரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயஸ்ரீ புகார்

ஜெயஸ்ரீ புகார்

மேலும் ஈஸ்வர் தனது மகளிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்றும் ஜெயஸ்ரீ புகார் கூறினார். தனக்கும் தனது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட நடிகை மகாலட்சுமி தான் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

ஈஸ்வர் பேட்டி

ஈஸ்வர் பேட்டி

இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த நடிகர் ஈஸ்வர் செய்தியாளர்களை சந்தித்து ஜெயஸ்ரீயின் புகார்களுக்கு பதில் அளித்தார். அப்போது அவர், ஜெயஸ்ரீயும் மகாலட்சுமியின் கணவரும் சேர்ந்துக்கொண்டு தன்னை குறிவைத்து தாக்குகிறார்கள் என்றார்.

ஜெயஸ்ரீ கூறியது பொய்

ஜெயஸ்ரீ கூறியது பொய்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, " என் மீது ஜெயஸ்ரீ கூறிய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய். ஜெயஸ்ரீயை நான் காதலித்து தான் திருமணம் செய்துகொண்டேன். அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர். எனக்கு அது தான் முதல் திருமணம்.

மகளாக வளர்த்தேன்

மகளாக வளர்த்தேன்

ஒரு குழந்தையுடன் தான் அவர் என் வீட்டிற்கு வந்தார். திருமணமான நாளில் இருந்து அந்த குழந்தையை நான் எனது மகளாகத்தான் வளர்த்து வருகிறேன். அப்படி இருக்கும் போது எப்படி நான் அந்த குழந்தையிடம் தவறாக நடந்திருப்பேன். அவரை நான் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியது அனைத்தும் பொய்.

பணம் பறிக்க பார்க்கிறார்

பணம் பறிக்க பார்க்கிறார்

ஜெயஸ்ரீயின் நோக்கம் பணம் மட்டும் தான். என்னுடைய அனைத்து பொருட்களும் அவரிடம் தான் உள்ளது. தற்போது நான் வந்திருப்பது கூட தந்தையின் காரில் தான். என்னிடம் இருந்து பணம் பார்ப்பதற்காகவே ஜெயஸ்ரீ இப்படி செய்கிறார்.

மகாலட்சுமியின் கணவர்

மகாலட்சுமியின் கணவர்

ஜெயஸ்ரீயும் மகாலட்சுமியின் கணவரும் ஒன்றாக சேர்ந்துகொண்டு என்னை குறிவைத்து தாக்குகிறார்கள். அவர்களுக்கு இடையே தவறான உறவு இருக்கிறது. அதற்கான அனைத்து ஆதாரங்களும் என்னிடம் உள்ளது.

புகைப்பட ஆதாரம்

புகைப்பட ஆதாரம்

இருவரும் சேர்ந்து ஒன்றாக மது அருந்திய புகைப்படங்கள் என்னிடம் இருக்கிறது. இந்த தீபாவளியைக் கூட அவர்கள் இருவரும் சேர்ந்து தான் கொண்டாடினார்கள். அந்த புகைப்படங்களும் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் அதை நிச்சயம் நான் வெளியிடுவேன்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X