3 மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்'.. பாலியல் நடிகை கேரக்டருக்கு ரெடியாகும் பிரபல ஹீரோயின்!
ஐதராபாத்: மூன்று மொழிகளில் உருவாகும் 'ஹீரோயின்' என்ற படத்தில், பாலியல் பட நடிகையாக பிரபல நடிகை நடிக்க இருக்கிறார்.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் நடித்து வருகிறார், நடிகை எஸ்தர் நோரன்ஹா.
தமிழில், பிரபு, ஜெயராம் நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள அவர், மேலும் சில படங்களில் நடிக்க இருக்கிறார்.

பீமாவரம் புல்லுடு
இந்தியில் சரோஜ்கான் இயக்கிய பரோமாஸ் என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமான எஸ்தர், தொடர்ந்து குயாமத் ஹே குயாமத் படத்தில் நடித்தார். தேஜா இயக்கிய 1000 அப்பாடுலு என்ற படம் மூலம், தெலுங்கில் அறிமுகமானார். பிறகு சுனிலின் பீமாவரம் புல்லுடு என்ற படத்தில் நடித்தார்.

கொங்கனி படங்கள்
கன்னடப் படங்களிலும் நடித்து வரும் இவர், கடந்த சில வருடங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. எஸ்தர் நோரன்ஹா சிறந்த பாடகியும் கூட. இவர் சில படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார். கொங்கனி படங்களில் பாடியுள்ள அவர், ஏராளமான மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இஞ்சி இடுப்பழகி
இவர் பின்னணி பாடகர் நோயல் சீன் என்பவரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். தெலுங்கு ராப் பாடகரான நோயல் சீன், தமிழில் இஞ்சி இடுப்பழகி படத்திலும், காதல்னா சும்மா இல்லை படத்திலும் பாடி இருக்கிறார். இவர்கள் காதலுக்கு இரு குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இசை ஆல்பங்கள்
திருமணத்துக்குப் பின் இருவரும் இணைந்து இசை ஆல்பங்களில் பங்கேற்று வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் பிரிந்தனர். தாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தார் நோயல்.

பாலியல் நடிகை
இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் உருவாகும் படம் ஒன்றில் நடிக்கிறார். இதற்கு 'ஹீரோயின்' என்று டைட்டில் வைத்துள்ளனர். கிரைம் த்ரில்லர் படமான இதை திருப்பதி எஸ்.ஆர். என்பவர் இயக்குகிறார். இதில் எஸ்தர் நோரன்ஹா, பாலியல் பட நடிகையாக, கிளாமராக நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











