அந்த குழந்தை நட்சத்திரமா இது? மாடர்ன் லுக்கில்.. ஆளே தெரியாம மாறிட்டாங்களே..? வியக்கும் ஃபேன்ஸ்!
கொச்சி: குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக, சில படங்களில் நடித்து வந்தவர் எஸ்தர் அனில்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷயம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

இளைய மகள் மீனு
அந்தப் படம் தமிழில், பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. ஜீத்து ஜோசப் இயக்கினார். கமல்ஹாசன் ஹீரோவாக நடித்தார். மலையாளத்தில் நடித்த அதே கேரக்டரில் தமிழிலும்
நடித்தார் எஸ்தர் அனில். கமலின் மூத்த மகளாக நிவேதா தாமஸ் நடிக்க, இளைய மகளாக மீனு என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

வெங்கடேஷ் மகள்
அவர் நடிப்பு, ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இதையடுத்து இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் வெங்கடேஷ் மகளாக நடித்திருந்தார் எஸ்தர். அடுத்து, மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய மிஸ்டர் அண்ட் மிசஸ் ரவுடி, ஷேன் நிகம் நடித்த ஊலு, சந்தோஷ் சிவன் இயக்கிய ஜேக் அண்ட் ஜில் ஆகிய படங்களில் நடித்தார்.

வளர்ந்து விட்டார்
தெலுங்கில் ஜோஹர் என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்திருந்தார். அந்த சின்னப் பெண், எஸ்தர், இப்போது வளர்ந்து விட்டார். அவரை உற்றுப் பார்த்தால் கூட பாபநாசம் படத்தில் நடித்த எஸ்தரை கண்டுபிடிக்க முடியாது. அந்தளவுக்கு ஆளே மாறி இருக்கிறார். இவர் சேலை கட்டி, சில மாதங்களுக்கு முன், சமூக வலைதளப்பக்கத்தில் புகைப்படங்கள் வெளியிட்டி ருந்தார்.

செம மாடர்னாக
அது வைரலானது. இந்நிலையில் இப்போது புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களில் செம மாடர்னாக ஹீரோயின் மாதிரி இருக்கிறார் எஸ்தர். இந்த போட்டோஸை பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்ஸ்களையும் நூற்றுக்கணக்கான கமென்ட்களையும் பெற்றிருக்கிறது இன்ஸ்டாவில்.

நம்பவே முடியவில்லை
ஏராளமான ரசிகர்கள், அவர் அழகை வியந்துள்ளனர். சிலர், இது எஸ்தர் என்று நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். எங்க கண்ணுமுன்னால வளர்ந்த குழந்தை இவ்வளவு பெரிசா மாறிட்டாங்களே, அதிக உயரம் தொட வாழ்த்துகள் என்று சிலர் கூறியுள்ளனர். இந்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











