Esther Anil: அம்மா நடிகையாக மாறிட்டாரா பாபநாசம் பாப்பா.. எஸ்தர் அனிலை கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: பாபநாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் குமரியாக மாறி உள்ள நிலையில், சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களால் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.

கடந்த 2010ல் மலையாளத்தில் வெளியான நல்லவன், ஒருநாள் வரும் உள்ளிட்ட படங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் எஸ்தர் அனில்.

த்ரிஷ்யம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எஸ்தர் அனில் தமிழில் கமல் நடித்த பாபநாசம் படத்திலும் மகளாக நடித்து அசத்தி இருந்தார்.

Esther Anil who donned like Shobana like attire gets trolled by fans

பாபநாசம் பாப்பா: இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளம் மற்றும் தெலுங்கில் த்ரிஷ்யம் எனும் பெயரில் வெளியான படத்தில் ஹீரோவின் இளைய மகளாக நடித்திருந்தார் எஸ்தர் அனில்.

கமல்ஹாசன் நடிப்பில் தமிழில் வெளியான அந்த படத்தின் ரீமேக்கிலும் எஸ்தர் அனில் இளைய மகளாகவே நடித்திருந்தார். மற்ற நடிகர்கள் மாற்றப்பட்டாலும், எஸ்தர் அனிலின் அந்த பார்வைக்காகவே அவரையே இயக்குநர் ஜீத்து ஜோசப் த்ரிஷ்யம் படங்களில் பயன்படுத்தி இருந்தார்.

த்ரிஷ்யம் 2 படத்திலும் வளர்ந்த பாப்பாவாக எஸ்தர் அனில் நடித்திருந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் அவருக்கு ஏகப்பட்ட ஃபாலோயர்கள் அதிகரித்து வருகின்றனர்.

Esther Anil who donned like Shobana like attire gets trolled by fans

இன்ஸ்டாகிராம் இளவரசி: குழந்தை நட்சத்திரமாக நடித்த சாரா அர்ஜுன், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட நடிகைகள் தற்போது ஹீரோயினாகி வரும் நிலையில், அந்த வரிசையில் எஸ்தர் அனிலும் இணைந்துள்ளார். ஹலிதா ஷமீம் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

எஸ்தர் அனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.2 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் அவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.

ஷோபனாவாக மாறிய எஸ்தர் அனில்: நடிகை ஷோபனா போலவே மாற வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சேலை கட்டி வகிடு எடுத்து தலை வாரி பொட்டு வைத்து அழகு பொங்க அம்சமாக போஸ் கொடுத்து நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சுப்புலக்‌ஷ்மி என ஷோபனாவின் கதாபாத்திர பெயரையும் பதிவிட்டுள்ளார் எஸ்தர் அனில்.

Esther Anil who donned like Shobana like attire gets trolled by fans

அந்த போட்டோக்களை பார்த்த எஸ்தர் அனில் ரசிகர்கள் செம டிரான்ஸ்ஃபர்மேஷன் என கொண்டாடி வரும் நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்களும் குவிந்து வருகின்றன.

அம்மாவா நடிக்கிறீங்களா: ஷோபனா என எஸ்தர் அனில் குறிப்பிட்ட நிலையில், உங்களை பார்க்க மீரா ஜாஸ்மின் போல இருக்கிறது என்றும் அதுக்குள்ள பாபநாசம் பாப்பா அம்மா நடிகையாக மாறிட்டீங்களா என ட்ரோல் செய்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X