சிம்புவின் ஈஸ்வரன் ஓடிடியில் ரிலீஸ் இல்லை.. திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பால் அதிரடி!

சென்னை: ஈஸ்வரன் திரைப்படம் இந்தியாவுக்கு வெளியில் ஓடிடியில் ரிலீஸ் செய்யயப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். கிராமத்து பின்னணியில் ஃபேமிலி சப்ஜெக்ட்டாக உருவாகி உள்ள இந்தப் படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்தப் படத்திற்காக நடிகர் சிம்பு 30 கிலோ வரை எடையை குறைத்து செம ஸ்லீம்மாக மாறினார். இதனை தொடர்ந்து படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது.

400 தியேட்டர்ஸ்

400 தியேட்டர்ஸ்

இந்நிலையில் ஈஸ்வரன் படம் வரும் 14-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. இதற்காகன புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் தமிழ்நாட்டில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஓடிடிக்கு எதிர்ப்பு

ஓடிடிக்கு எதிர்ப்பு

இதனிடையே ஈஸ்வரன் படம் வெளிநாட்டில் பிரபலமாக இருக்கும் OLYFILX என்னும் ஓடிடி மூலம் இந்தியாவுக்கு வெளியே ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்

ஒத்துழைப்பு தர மாட்டோம்

ஒத்துழைப்பு தர மாட்டோம்

ஓடிடியில் ரிலீஸ் செய்தால் 'ஈஸ்வரன்' படத்தை வெளியிடமாட்டோம் எனத் தெரிவித்தனர். ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும் 'ஈஸ்வரன்' படத்திற்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என அறிவித்தனர்.

ஓடிடியில் ரிலீஸ் இல்லை

ஓடிடியில் ரிலீஸ் இல்லை

இதனை தொடர்ந்து படக்குழு திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு எட்டப்படாததால் இந்தியாவுக்கு வெளியே படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்யும் முடிவை படக்குழு கைவிட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X