twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருக்கைகளுக்கான அனுமதி வாபஸானால்.. மாஸ்டர் மட்டும்தான்.. ஈஸ்வரன் இல்லை.. திருப்பூர் சுப்பிரமணியன்!

    |

    சென்னை: திரையரங்குகளில் 100 % இருக்கைகளுக்கான அனுமதி வாபஸ் பெறப்பட்டால் மாஸ்டர் படம் மட்டுமே ரிலீஸ் ஆகும் என திருப்பூர் சுப்பிரமணியம் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

    கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படம் லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

    ஜனவரி 13ஆம் தேதி

    ஜனவரி 13ஆம் தேதி

    இந்நிலையில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நவம்பர் 10-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் 13ஆம் தேதி மாஸ்டர் திரைப்படம் திரைக்கு வரவுள்ளதாக அண்மையில் அறிவித்தது.

    படத்தின் ரிலீஸ் தகவல்

    படத்தின் ரிலீஸ் தகவல்

    ஆனால் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
    படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை அறிவித்த கையோடு நடிகர் விஜய் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் 100% இருக்கைகளை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    100% இருக்கைகளுக்கு அனுமதி

    100% இருக்கைகளுக்கு அனுமதி

    இதேபோல் நடிகர் சிம்புவின் ஈஸ்வரன் படமும் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டதால் நடிகர் சிம்புவும் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதினார். இருவரின் கோரிக்கையையும் ஏற்ற தமிழக அரசு, திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தது.

    மத்திய அரசு எதிர்ப்பு

    மத்திய அரசு எதிர்ப்பு

    ஆனால் தமிழக அரசின் அறிவிப்புக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். இந்த அனுமதியை மறுபரிசீலனை செய்யுமாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மீண்டும் 50% இருக்கைகள்

    மீண்டும் 50% இருக்கைகள்

    இதனால் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இதுதொடர்பாக வழக்கு ஒன்றும் மதுரை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    ஈஸ்வரன் இல்லை

    ஈஸ்வரன் இல்லை

    இந்நிலையில் 100% இருக்கைகளுக்கு அனுமதி என்ற உத்தரவை அரசு திரும்பப் பெற்றால் வரும் பொங்கல் திருநாளில் 'மாஸ்டர்' திரைப்படம் மட்டுமே வெளியிடப்படும் என்றும் ஈஸ்வரன் படம் வெளியிடப்படாது என்றும் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்

    சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி

    சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி

    இந்த அறிவிப்பால் சிம்புவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொங்கல் நாளில் ஈஸ்வரன் படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ள நிலையில் திருப்பூர் சுப்பிரமணியத்தின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Thirupur Subramaniyam says if govt withdraws Permission for 100% Seat in theaters Eswaran movie will not be released. He says if govt allows only 50% seat then Master movie only will be released.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X