சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’… முக்கிய தகவலை வெளியிட்ட இயக்குனர் !

சென்னை : சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முக்கிய தகவலை இயக்குனர் பாண்டியராஜ் வெளியிட்டுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், சூரி, ப்ரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

2டி நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படம் பலரது பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார்.மேலும், சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி , இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு

ரசிகர்களிடம் வரவேற்பு

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. அதில், சூர்யா, வேஷ்டி சட்டையில் கையில் வாள், துப்பாக்கி போன்றவற்றை வைத்து கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட மாஸாக நின்றிருந்தார். இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படப்பிடிப்பு முடிந்தது

படப்பிடிப்பு முடிந்தது

இந்நிலையில்,எதற்கும் துணிந்தவன் படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக பாண்டியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், நாயகன் சூர்யா மற்றும் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார். படம் குறித்த அடுத்த அப்டேட்கள் விரைவில் வர இருப்பதாகவும் பாண்டியராஜ் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து படத்தை வெளியிடுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது.

வாடிவாசல்

வாடிவாசல்

நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்க்ததி வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். சி.சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. வெற்றிமாறன், தற்போது நடிகர் சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கிவருகிறார். இப்படங்கள் நிறைவுபெற்ற பின்பே இருவரும் வாடிவாசல் படத்தில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படும்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X