Don't Miss!
- News
"கூரை ஏறி முடியாதவர் வைகுண்டம் போவாராம்".. திரௌபதி முர்மு ஊரில் மின்சாரமே இல்லை.. வாசுகி விளாசல்
- Technology
உடனே நீக்குங்கள், அது சுத்தமான சீன உளவு செயலி: Google, Apple க்கு கடிதம்!
- Sports
யாரும் எடுக்காத துணிச்சல் முடிவு..? இந்திய ப்ளேயிங் 11ல் அஸ்வினின் நிலை என்ன?- டிராவிட்டின் ஐடியா
- Finance
முதல்நாளே இப்படியா? பாவம் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்.. 540 புள்ளிகள் சென்செக்ஸ் சரிவு..!
- Lifestyle
ஜூலை மாதம் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஆபத்து அதிகமாம்...!
- Automobiles
வெறும் ரூ.1 லட்சம் தான்... ஆட்டம் வடேர் அதிவேக எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!! 100கிமீ ரேஞ்ச்
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
எதற்கும் துணிந்தவன் vs ராதே ஷ்யாம்.. யாரு ஜெயிப்பா? பிகேவின் பக்காவான டாப் 5 பீட்ஸ்!
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. மார்ச் 11ம் தேதியான நாளை மறுநாள் பிரபாஸின் ராதே ஷ்யாம் திரைப்படமும் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பான் இந்திய படமாக வெளியாகிறது.
டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஒடிடியில் தனுஷின் மாறன் திரைப்படமும் மார்ச் 11ம் தேதி வெளியாகிறது.
இந்நிலையில், சூப்பரான டாப் 5 பீட்ஸ் செய்தி வீடியோவை நம்ம பிகே வெளியிட்டுள்ளார்.

அதில், முதல் பீட்டாக தனுஷின் மாறன் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றும் முதல் முறையாக தனுசுக்கு ஜோடியாக இந்த படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.
கோ, கவண் போன்ற படங்களை போல இந்த படம் இருக்கும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது என்றும் மாறன் தனுசுக்கு நல்ல ஹிட் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
அடுத்ததாக, இந்த வாரம் திரையரங்குகளை ஆட்சி செய்ய உள்ள எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷ்யாம் படங்களுக்கு இடையே நடக்கப் போகும் பாக்ஸ் ஆபிஸ் போட்டி பற்றியும் பேசியுள்ளார்.
இந்த இரு படங்களில் தமிழ்நாட்டில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் அதிக வசூலை செய்யப் போகிறதா? அல்லது பாகுபலியின் பாதிப்பு காரணமாக ராதே ஷ்யாம் வசூல் வேட்டை ஆடப் போகிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.
மேலும், சுந்தர் சி இயக்கத்தில் ஜெய், ஜீவா நடித்து வரும் புதிய படம் பற்றியும், வெங்கட் பிரபு இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்து வரும் மன்மதலீலை படம் பற்றியும் சமீபத்தில் நடந்து முடிந்த இயக்குநர் சங்க தேர்தலில் மீண்டும் செல்வமணி வெற்றி பெற்றது குறித்தும் டாப் 5 பீட்களை எடுத்து வந்து தனது ஸ்டைலில் சொல்லி இருக்கிறார் பிகே.