Etharkkum Thunindhavan Box Office Collection Day 2: எதற்கும் துணிந்தவன் 2வது நாள் வசூல் எவ்வளவு?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

Recommended Video

Etharkkum Thunindhavan Review | ET Review | Yessa ? Bussa ? | Suriya |Priyanka Arul Mohan|Pandiraj

வலிமை படத்திற்கு முதல் வாரம் மட்டும் நல்ல புக்கிங் இருந்த நிலையில், சூர்யா படத்துக்கு முதல் இரண்டு நாட்களில் கூட பெரியளவிலான புக்கிங் இல்லை எனக் கூறப்படுகிறது.

முதல் நாள் வசூலை விட வெள்ளிக்கிழமையான நேற்று தமிழ்நாடு முழுவதும் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வசூல் பெரியளவில் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஓடிடி செய்த வேலை

ஓடிடி செய்த வேலை

சூர்யா ரசிகர்கள் தான் முதல் இரு நாட்களில் தியேட்டருக்கு வந்து ஷோக்களை ஹவுஸ்ஃபுல் ஆக்கவேண்டும் ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக சூர்யாவின் படங்களை ஓடிடியில் வெளியான நிலையில், சூர்யா ரசிகர்களும் பொறுமையாக படம் சீக்கிரமே சன் நெக்ஸ்ட்டில் வந்துவிடும் என காத்திருக்கிறார்கள் போல தெரிகிறது. முதல் இரு நாட்களிலும் எதற்கும் துணிந்தவன் படம் பெரியளவில் வசூல் ஈட்டவில்லை.

வார இறுதியில்

வார இறுதியில்

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என விடுமுறை நாட்களில் மட்டுமே மக்கள் குடும்பத்துடன் படத்திற்கு வருவார்கள். சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பண்டிகை தினத்தில் வராத நிலையில், முதல் இரு நாட்களும் பெரிய அளவில் புக்கிங் ஆகவில்லை. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தியேட்டர்கள் நிறைந்தால் தான் உண்டு.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் பெண்களுக்கான விஷயங்கள் மற்றும் பொழுதுபோக்கும் அம்சங்கள் நிறைந்திருக்கின்றன. ஆனாலும், முதல் நாளில் அந்த படத்திற்கு வெறும் 9.51 கோடி ரூபாய் வசூல் மட்டுமே வந்ததாக கூறப்படுகிறது.

இரண்டாம் நாள் வசூல்

இரண்டாம் நாள் வசூல்

இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெறும் 5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகமொத்தம் 14.51 கோடி ரூபாய் வசூலை எதற்கும் துணிந்தவன் திரைப்படம் முதல் 2 நாட்களில் தமிழ்நாடு அளவில் ஈட்டியிருப்பதாகவும், உலகளவில் 20 கோடி ரூபாய் வரை இந்த படம் வசூல் ஈட்டியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நல்ல வசூல் தான்

நல்ல வசூல் தான்

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமே 50 முதல் 60 கோடி பட்ஜெட்டில் தான் உருவாக்கப்பட்டு இருக்கும் எனக் கூறப்படுகிறது. முதல் வார முடிவில் 30 கோடி ரூபாய் வசூலை இந்த படம் ஈட்டினாலே போதும், சாட்டிலைட் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் என ஏற்கனவே நல்ல விலைக்கு படம் வியாபாரம் ஆகி உள்ளதால், எதற்கும் துணிந்தவன் வெற்றி தான் என சன் பிக்சர்ஸ் கொண்டாட ஆரம்பித்து விட்டது. இயக்குநர் பாண்டிராஜுக்கும் மாலை எல்லாம் போட்டு படக்குழுவினர் முதல் நாள் முடிவிலேயே சக்சஸ் பார்ட்டி வைத்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X