நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையிலான சண்டை... ஆக்ஷன் காட்சியில் சூர்யா சிறப்பு!

சென்னை : நடிகர் சூர்யா லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படத்தின் ப்ரமோஷன் முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்த பிரமோக்கள் வெளியாகி வருகின்றன.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா மோகன், வினய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். இந்தப் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. கடந்த மாதத்திலேயே படத்தின் ரிலீஸ் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தள்ளிப் போனது.

 மார்ச் 10ல் ரிலீஸ்

மார்ச் 10ல் ரிலீஸ்

இந்நிலையில் இன்னும் மூன்று நாட்களில் படம் ரிலீசாக உள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது பிரமோஷனை முடுக்கியுள்ளது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில், டீசர், ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி பட்டையை கிளப்பியது.

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

அடுத்தடுத்த ப்ரமோக்கள்

இன்னிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படத்தின் அடுத்தடுத்த பிரமோக்களை வெளியிட்டு ரசிகர்களை தொடர்ந்து எதிர்பார்ப்பிலேயே இருக்க வைத்துள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள பிரமோவில் சூர்யா, கெட்டவர்களை துவம்சம் செய்கிறார். வினய் சைக்கோ தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பாலியல் வன்முறைக்கு எதிரான படம்

பாலியல் வன்முறைக்கு எதிரான படம்

பாலியல் வன்முறைக்கு எதிரான படம் என்பதை இந்தப் ப்ரமோவும் வெளிப்படுத்தியுள்ளது. ஏண்டா அந்தப் பெண்ணை தொட்டோம்னு நீயும் உன்னோட சந்ததியும் வருத்தப்படுவீங்கடா என்று சூர்யா கூறுகிறார். உற்சாகமான சூர்யாவையும் இந்த பிரமோவில் பார்க்க முடிகிறது. சந்தோஷத்தில் பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதுதான் என்றும் அவர் கூறுகிறார்.

நன்மை vs தீமை

மேலும் நன்மைக்கும் தீமைக்குமான சண்டை என்றும் ப்ரமோவில் கூறப்பட்டுள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார் சூர்யா. வழக்கறிஞராகவும் அவர் நடித்துள்ளது ப்ரமோக்களில் தெரிகிறது. மேலும் படத்தின் தீம் மியூசிக் குறித்த அறிவிப்பும் இதில் காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X