1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த உள்ளம் உருகுதய்யா பாடல்!

சென்னை : இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றிய திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.நிறைய எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

எதற்கும் துணிந்தவன் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியாகி ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு

நீண்ட இடைவெளிக்கு பிறகு

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்களில் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை ஈர்த்து பல சர்வதேச விருதுகளை குவித்தது. இந்நிலையில் அடுத்ததாக கூட்டுக் குடும்ப பின்னணி இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் சூர்யா நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதை களத்தில் சூர்யா நடித்த இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

 பிரியங்கா மோகன்

பிரியங்கா மோகன்

டாக்டர் படத்தில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சரண்யா பொன்வண்ணன்,சத்யராஜ், ராஜ்கிரண்,வினய்,சூரி, எம்எஸ் பாஸ்கர், ஜெயபிரகாஷ், ரேடின் கிங்ஸ்கி, தங்கதுரை, குக் வித் கோமாளி புகழ் என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடிக்கிறது.

இதுவே முதல் முறையாகும்

இதுவே முதல் முறையாகும்

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த எதற்கும் துணிந்தவன் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றி உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி இமான் இசை அமைக்கிறார். சூர்யா ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்திற்கு டி இமான் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும்.

சூர்யா முருகன் வேடத்தில்

சூர்யா முருகன் வேடத்தில்

இந்த நிலையில் முதல் சிங்கிள் வாடா தம்பி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் உள்ளம் உருகுதய்யா பாடல் வெளியாகி அதிக கவனத்தை பெற்றுள்ளது. அதில் சூர்யா முருகன் வேடத்தில் நடித்திருப்பது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இதுவரை பல அவதாரங்களில் சூர்யா நடித்திருந்தாலும் முதல் முறையாக கடவுள் முருகன் அவதாரத்தில் பாடலில் தோன்றியுள்ளார்.

ஒரே நாளில் 1 மில்லியன்

ஒரே நாளில் 1 மில்லியன்

பாடலும் உள்ளம் உருகுதைய்யா என்ற பிரபலமான முருகன் பக்தி பாடலில் உருவாகியிருப்பதை படத்தின் மீதான கவனத்தை அதிக அளவில் ஈர்த்து உள்ளது. பக்தி பாடல் சாயலில் ரொமான்டிக் பாடலாக உருவாகியுள்ள உள்ளம் உருகுதையா பாடல் வரிகளை யுகபாரதி எழுதி இருக்க பிரதீப்குமார், வந்தனா ஸ்ரீனிவாசன், பிருந்தா மாணிக்கவாசகம் ஆகியோர் பாடியுள்ளனர். டி இமான் இப்பாடலுக்கு இசையமைத்துள்ளார். கேட்கவே மிகவும் இனிமையான பாடலாக அமைந்து உள்ளது என்று பாராட்டுக்கள் குவிகிறது . உள்ளம் உருகுதைய்யா பாடல் வெளியான ஒரே நாளில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது என்பது ரசிகர்களுக்கு கூடுதல் சந்தோஷம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X