“எதற்கும் துணிந்தவன்“ சூர்யா கலக்கிவிட்டார்… ஒளிப்பதிவாளர் கலகல பேச்சு !
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் டிரைலர் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு படம் குறித்து சுவாரசியமாக பேசினார்.
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

எதற்கும் துணிந்தவன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உட்பட பலர் நடித்திருக்கும் படம் எதற்கும் துணிந்தவன். டி. இமான் இசையமைத்துள்ளார். இன்பா என்ற கதாபாத்திரத்தில் வினய் வில்லனாக நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

சற்று நேரத்தில் டிரைலர்
கிராமப்புற பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இதில் சமூகத்தில் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சோசியல் மீடியாவில் வெளியிடப்பட்ட நிலையில் இன்னும் சற்று நேரத்தி இப்படத்தின் ட்ரெய்லர் யூட்யூப்பில் வெளியாக உள்ளது. டிரைலர் வெளியீட்டு விழாவிற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கலாநிதிக்கு நன்றி
இந்த விழாவில் பாண்டிராஜ், சூர்யா, சத்யாராஜ், பிரியங்காமோகன், சரண்யா பொன்வண்ணன்,விநய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் பேசி ஒளிப்பதிவாளர் ரத்தினவேலு, எத்திரன் திரைப்படத்திற்கு பிறகு சன்பிக்சர்சுடன் இப்படத்தில் இணைந்து இருக்கிறார். இதற்காக கலாநிதி அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

சூர்யா கலக்கி உள்ளார்
அதேபோல,வாரணம் ஆயிரம் திரைப்படத்திற்கு சூர்யாவுன் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் இணைந்துள்ளேன். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தில் சூர்யா கலக்கிவிட்டார். படம் மாஸாக இருக்கும் நீங்கள் இந்த படத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்றார்.


Click it and Unblock the Notifications











