சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்… எதற்கும் துணிந்தவன் படக்குழு வெளியிட்ட முக்கிய தகவல் !
சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குறித்த முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
மார்ச் 10ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், படத்தின் விளம்பர வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இமான் இசையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து வெளிவந்த வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா, சும்மா சுர்ருன்னு என்ற 3 பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

எதற்கும் துணிந்தவன்
சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்கிய பாண்டிராஜ், மீண்டும் சன் பிக்சர்ஸுடன் இணைந்துள்ளார். அவர்கள் தயாரிப்பில் எதற்கும் துணிந்தவன் படத்தை இயக்கியுள்ளார். சூர்யா நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மார்ச் 10ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. முன்னணி நடிகர்களின் படங்கள் பான் இந்தியா படங்களாகத்தான் வெளியாகி வருகின்றன. எதற்கும் துணிந்தவன் படமும் தமிழ் தவிர, தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவர உள்ளது.

டிஇமான் இசை
எதற்கும் துணிந்தவன் படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சரண்யா பொன்வண்ணன், சூரி, எம் எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்துள்ளனர். டி இமான் இசையமைத்துள்ளார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். எதற்கும் துணிந்தவன் படமும் பாண்டிராஜின் நம்ம வீட்டுப் பிள்ளை, கடைக்குட்டி சிங்கம் படங்களைப் போன்ற கிராமத்துப் பிண்ணனியில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லும் படமாக உருவாகியுள்ளது.

டீசர்
இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் டீசர் பிப்ரவரி 18ந் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்படத்திற்கு தணிக்கை குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளதால் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

திரையில் காண ஆர்வம்
சூர்யாவின் கடைசி இரு படங்களான சூரரைப்போற்று, ஜெய்பீம் இரண்டும் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது.


Click it and Unblock the Notifications











