சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்… வெறித்தனமான மோஷன் போஸ்டர் ரிலீஸ்!
சென்னை : சூர்யா நடித்துள்ள 'எதற்கும் துணிந்தவன்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படம் பிப்ரவரி 4ந் தேதி திரையரங்கிவ் வெளியாக உள்ளதால் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகின்றன.
இருதினங்களுக்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிள்வெளியாகி வைரலானது.

எதற்கும் துணிந்தவன்
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எதற்கும் துணிந்தவன்'. இந்தப் படத்தின் நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணியாற்றி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடந்து நவம்பரில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

பிப்ரவரியில் ரிலீஸ்
இப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் இப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக அறிவித்தது.

வாடா தம்பி
டி இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் வாடா தம்பி என்ற பாடல் சில தினங்களுக்கு முன் வெளியாகி வைரலானது. இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், அனிருத் ஆகிய இருவரும் இணைந்து பாடி இருந்தனர். பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே சோஷியல் மீடியாவில் வைரலானது.
மோஷன் வீடியோ
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக ஒரு மாதமே உள்ளதால், இத்திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. தற்போது இப்படத்தின் தாறுமாறான மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதில் சூர்யா சிவப்பு சட்டையில் காலரை தூக்கி விட்டபடி ஆக்ரோஷமாக நடக்கிறார். இந்த வீடியோவை சூர்யாவின் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications