அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்லும் "எதற்கும் துணிந்தவன்" படக்குழு... முக்கிய அப்டேட்!
சென்னை : நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றிக்குப் பிறகு இயக்குனர் பாண்டிராஜ் தற்போது இயக்கி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய படமாக உருவாகி வர சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார்.
காரைக்குடி,சென்னை,தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு கோவா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா
குடும்ப உறவுகளை கொண்டாடும் திரைப்படங்களை தொடர்ந்து இயக்கி முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன் . சத்யராஜ், ராதிகா, சூரி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

காரைக்குடியில் படப்பிடிப்பு
முதற்கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வந்தது. அதை தொடர்ந்து சென்னையில் ஈசிஆரில் சில காட்சிகள் படமாக்கப்பட்டது . அதைத்தொடர்ந்து இறுதி கட்ட படப்பிடிப்புக்காக தென்காசி சென்ற படக்குழு அந்த படப்பிடிப்பையும் தற்பொழுது முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். சூர்யா படத்திற்கு டி இமான் இசையமைப்பது இதுவே முதல் முறையாகும். டாக்டர்,டான் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகை பிரியங்கா அருள்மோகன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் . பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.

விரைவில் கோவா செல்லும் படக்குழு
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்பொழுது இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் எடுக்கப்பட இருக்கிறது.. அதில் ஒரு பாடல் கோவாவிலும் மற்றொரு பாடலை சென்னையிலும் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக படக்குழு விரைவில் கோவா செல்ல உள்ளது. பண்டிகை நாளை குறிவைத்து தயாராகிவரும் எதற்கும் துணிந்தவன் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .


Click it and Unblock the Notifications











