வாடா தம்பி... சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு.. குவியும் வியூஸ்!

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 4ஆம் தேதி

பிப்ரவரி 4ஆம் தேதி

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அண்மையில் அறிவித்தனர். அதன்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

வாடா தம்பி பாடல் வெளியீடு

வாடா தம்பி பாடல் வெளியீடு

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான வாடா தம்பி பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலை ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் ஆகியோர் பாடியுள்ளனர். இந்தப் பாடலை பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

5 மொழிகளில் ரிலீஸ்

5 மொழிகளில் ரிலீஸ்

இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் ஒரு பாடலை எழுதியுள்ளார். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழு அண்மையில் அறிவித்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடி தளத்திலேயே ரிலிஸ் செய்யப்பட்டன. இந்நிலையில் காப்பான் படத்திற்கு பிறகு எதற்கும் துணிந்தவன் திரைப்படம்தான் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X