ரெடியா இருங்க அன்பா ஃபேன்ஸ்... 5 மொழிகளில் வருகிறது சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்.. அசத்தல் அப்டேட்!
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் குறித்த அசத்தல் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சத்யராஜ், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பிப்ரவரி 4ஆம் தேதி
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அண்மையில் அறிவித்தனர். அதன்படி எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எதற்கும் துணிந்தவன் அப்டேட்
இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இருவரும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் பாடல்களை எழுதியுள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்த மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

5 மொழிகளில் ரிலீஸ்
அதாவது எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடன், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

நீண்ட இடைவேளிக்கு பிறகு
இதனை பார்த்த ரசிகர்கள் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பிப்ரவரி 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. கொரோனா லாக்டவுன் காரணம் கடந்த 2 ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆன நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











