5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாஸ் காட்டும் எதற்கும் துணிந்தவன் டீசர்!

சென்னை : நடிகர் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்

கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து குடும்பப் படங்களை இயக்கி வரும் இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்

டாக்டர் படத்தை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து இருக்க சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் டீசர் இப்பொழுது இணையதளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெறித்தனமாக வைரலாகி வருகிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதையில்

நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதையில்

கடைக்குட்டி சிங்கம்,நம்ம வீட்டு பிள்ளை என தொடர்ந்து குடும்பப் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் குடும்ப இயக்குனர் என்ற பெயரை எடுத்த இயக்குனர் பாண்டிராஜ். இவர் இப்பொழுது எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தில் சூர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வந்த சூர்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு கிராமத்து கதையில் நடிக்கிறார். கூட்டுக்குடும்பம், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை பற்றி இப்படம் உருவாகியுள்ளது.

காமெடியிலும் கலக்கி இருப்பார்

காமெடியிலும் கலக்கி இருப்பார்

டாக்டர் வெற்றியை தொடர்ந்து நடிகை பிரியங்கா மோகன் எதற்கும் துணிந்தவன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். டாக்டர் படத்தில் வெறும் க்யூட் கதாநாயகியாக மட்டும் வந்து செல்லாமல் சிவகார்த்திகேயன் மற்றும் யோகி பாபு உடன் இணைந்து காமெடியிலும் கலக்கி இருப்பார். தமிழில் இதுவரை ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே பிரியங்காவுக்கு வெளியாகியிருந்தாலும் இப்போது தமிழில் இவருக்காக மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது. டாக்டர்,எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டான் படத்தில் நடித்து வருகிறார்

பெண்கள் பாலியல் வன்கொடுமையை

பெண்கள் பாலியல் வன்கொடுமையை

சத்யராஜ், ராஜ்கிரண்,சரண்யா பொன்வண்ணன், சூரி, எம்எஸ் பாஸ்கர் , ரெடின் கிங்ஸ்லி என மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது. துப்பறிவாளன், டாக்டர் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் வினய் வில்லனாக நடித்துள்ளார். அனைவரும் விரும்பும் குடும்ப படமாக இப்படம் உருவாகி உள்ளது. மேலும் இந்த படம் பெண்கள் பாலியல் வன்கொடுமையை பற்றி மிக முக்கியமாக பேச உள்ளது. டி இமான் இசையமைத்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது

5 மில்லியன்

5 மில்லியன்

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் எதற்கும் துணிந்தவன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிரடியான சண்டைக்காட்சிகள் சென்டிமென்ட் காட்சிகள் என கலர்ஃபுல்லாக வெளியான எதற்கும் துணிந்தவன் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில் இப்பொழுது இணையதளத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X