“எல்லாம் ஆர்வமாக இருக்காங்க“…. எதற்கும் துணிந்தவன் கலக்கல் அப்டேட்!
சென்னை : எதற்கும் துணிந்தவன் திரைப்படம் குறித்து முக்கியமான தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு உலகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
பிரியங்கா மோகன், தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெய்பீம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான ஜெய் பீம் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுத்தந்தது. உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் என்பதாலும், காவல்துறையின் மற்றொரு கோரமுகத்தை அப்பட்டமாக தோலுறித்து காட்டியது. இந்த படத்தில் சந்துரு என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா எதார்த்தமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

எதற்கும் துணிந்தவன்
ஜெய்பீம் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், தேவதர்ஷினி, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினய் ராய் வில்லனாகவும், நடிகர் சூரி நகைச்சுவை வேடத்திலும் நடித்திருக்கின்றனர்.

பல மொழிகளில்
தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்திற்காக தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் சூர்யாவே டப்பிங் பேசியுள்ளார்.

முக்கியமான அப்டேட்
இந்நிலையில், இத்திரைப்படத்தின் டிரைலர் மார்ச் 2ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமாக தகவலை சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இதனால், சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications











