உக்ரைன் பிரச்சினை... சூர்யா வைத்த கோரிக்கை... டக்குன்னு சைலண்டான ரசிகர்கள்!
சென்னை : எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, உக்ரைனில் நடக்கும் போரைப்பற்றி பேசி ஒரு முக்கியமான கோரிக்கை வைத்தார், அவர் கோரிக்கையை கேட்டவுடன் அதுவரை கூச்சலிட்டுக்கொண்டிருந்த ரசிகர்கள் சைலண்டாகினர்.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் மார்ச் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.

உக்ரைன் மக்களுக்கு பிரார்த்தனை
எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, உக்ரைனிலிருந்து வரும் வீடியோவை பார்க்கும் போது மனம் பதைபதைக்கிறது. அனைவரும் பாதுகாப்புடன் தாயகம் திரும்ப வேண்டும் என்று உக்ரைன் மக்களுக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

அனைவருக்கும் நன்றி
அதைத்தொடர்ந்து பேசிய சூர்யா, கொரோனா நேரத்தில் இந்த படம் மிகுந்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த படத்திற்காக ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து தொழில் நுட்பகலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிரியங்காமோகன் சிறப்பான நடிப்பு
இந்த படத்தில் பிரியங்காமோகன் என்கூட ஹீரோயினான நடிச்சு இருக்காங்க. பிரியங்கா 3வது படிக்கும் போது என்னுடைய காக்க காக்க படத்தை பார்த்ததாக சொன்னாங்க. புது நடிகைபோல இல்லாமல் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து கனகச்சிதமாக நடித்து இருக்கிறார்கள் என்றார்.

ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை
தொடர்ந்து சத்யராஜ் குறித்து பேசிய சூர்யா, சத்யராஜ் மாமா 45 வருட எங்கள் குடும்ப நண்பர். ரசிகர்கள் இல்லை என்றால் நான் இல்லை, உங்களால் தான் நான், உங்களுக்கு ஒரு பிரச்சனை நடக்கும் போது அதைப்பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கமாட்டேன். எந்த நேரத்தில் பேச வேண்டுமோ அந்த நேரத்தில் பேசுவேன்,அந்த நேரத்தில் சத்யராஜ் மாமா எனக்கு பக்கபலமாக இருந்து என்னை ஊக்குவிப்பார் என்ற சத்யராஜ் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
Recommended Video

நீங்கள் தான் எதற்கும் துணிந்தவர்கள்
ஜெய் பீம் திரைப்படம் சிக்கலை சந்தித்த நேரத்தில் என்னுடைய ரசிகர்களும், ரசிகர் மன்ற தம்பிகளுக்கு நிறைய நெருக்கடி வந்தது. அதை என் தம்பிகள் பக்குவமாக கையாண்டதை பார்த்து தலைவணங்குகிறேன். நீங்கள் தான் எதற்கும் துணிந்தவர்கள். உங்களின் இந்த அன்பை கடவுளின் ஆசிர்வாதமாக பார்க்கிறேன் என்று உணர்ச்சி பொங்க பேசினார் சூர்யா.


Click it and Unblock the Notifications











