நீங்க கூப்ட்டா லேடிஸ்தான் திரும்பணும் நான் ஏன் திரும்பணும்?.. எதிர்நீச்சல் மாரிமுத்துவை பங்கம் செய்த பாலா
சென்னை: Ethirneechal Marimuthu (எதிர்நீச்சல் மாரிமுத்து) மாரிமுத்துவுடன் கலக்கப்போவது யாரு பாலா செய்யும் சேட்டைகள் தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது
கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் மாரிமுத்து. இரண்டு படங்களுமே சுமாரான வரவேற்பைப் பெற்றன. அதனையடுத்து மிஷ்கினின் வற்புறுத்தலின்பேரில் யுத்தம் செய் படத்தில் நடிகராக அறிமுகமானார். யுத்தம் செய் படத்துக்கு பிறகு வரிசையாக பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார் மாரிமுத்து. சமீபகாலமாக முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

அந்தவகையில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர், கமல் ஹாசன் நடித்திருக்கும் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய தமிழ் சினிமாவில் எதார்த்தமான நடிப்பை எந்த வித அலட்டலும் இல்லாமல் வெளிப்படுத்தும் வெகு சிலரில் மாரிமுத்துவும் ஒருவர். அதன் காரணமாகவே அவருக்கு வாய்ப்புகளும் குவிந்துவருவதாக கூறப்படுகிறது.
சின்னத்திரையில் மாரிமுத்து: பெரிய திரையில் இப்படி பல நடிகர்களுடன் நடித்து புகழடைந்திருந்தாலும் அவரை வெகுவாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது சின்னத்திரைதான். சன் டிவியில் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரை ஏற்றிருக்கிறார். இந்தக் கதாபாத்திரத்திலும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் மாரிமுத்து.

ஃபேமஸான மாரிமுத்து: குறிப்பாக அவர் தொண்டையை செருமுவதும், ஏய் இந்தாமா என்ற வசனமும் சமூக வலைதளங்களில் வெகு பிரபலம். பலர் அதை மீம்களுக்காகவும் பயன்படுத்திவருகின்றனர். இதனால் மாரிமுத்து பெரும்பாலும் இணையத்தில் ட்ரெண்டிங் டாபிக்கில் இருப்பார். இதற்கிடையே எதிர்நீச்சலில் நடிப்பதற்காக அவர் நாள் ஒன்றுக்கு 20,000 ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்ற தகவலும் வெளியானது கவனிக்கத்தக்கது.
பாலாவுடன் சேட்டை: இந்நிலையில் மாரிமுத்துவும், பாலாவும் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் சுவரின் பக்கமாக நின்றுகொண்டு மாரிமுத்துவின் ட்ரேட் மார்க் வசனமான, இந்தாமா ஏய் என பாலா சொல்ல, அதை கேட்டு மாரிமுத்துவும் அதை சொல்கிறார். அதுமட்டுமின்றி ஒருகட்டத்தில் ஃபோனை நோண்டிக்கொண்டிருக்கும் பாலாவை மாரிமுத்து இந்தாமா ஏய் திரும்ப மாட்டியா என கேட்கிறார். அதற்கு பாலாவோ நீங்கள் கூப்பிட்டால் லேடிஸ்தான் திரும்பணும் நான் ஏன் திரும்பணும் என கேள்வி எழுப்புகிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.
கலக்கப்போவது யாரு பாலா: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பாலா. அதன் பிறகு அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவருகிறார். ஏன் விஜய் டிவியின் ஸ்டார் ஆங்கர்களில் ஒருவர் எனவும் சொல்லலாம்.சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் கலக்குகிறார் அவர். அந்தவகையில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படத்தில் அவர் நடித்திருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











