சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல்.. இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்களும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா்.

ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்த மாரிமுத்து, பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக மாறினார்.

Ethirneechal Marimuthu funeral at Pasumalai, Varusanadu in Theni district

இதையடுத்து, கண்ணும் கண்ணும், புலிவால் உள்ளிட்ட 2 படங்களை இயக்கி இயக்குநராக மாறினார்.

நடிகர் மாரிமுத்து: இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய் படத்தில் நடிகராக மாறிய மாரிமுத்து, தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். இவர் பரியேறும் பெருமாள், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் வெளியான ஜெயிலர் படத்தில், வில்லன் வர்மாவின் வலது கையாக நடித்திருந்தார்.

மாரடைப்பு: இந்நிலையில், நேற்று காலை எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு வியர்த்துள்ளது இதனால், வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு வெளியே வந்த மாரிமுத்து, அவரே காரை ஓட்டி கொண்டு வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போதுஅவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்து கொண்டு இருக்கும் போதே அவரது உயிர்பிரிந்துள்ளது.

வீட்டில் குவித்த பிரபலங்கள்: இதையடுத்து, மாரிமுத்துவின் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, பிரசன்னா, விமல், ராமேஷ் கண்ணா, நடிகை சரண்யா பொண்வண்ணன் மற்றும் இயக்குநர்கள் பாண்டியராஜ், வசந்த் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த அனைத்து நடிகர்களும் வந்திருந்து அவருக்கு மாலை அணிவித்து அஞ்சசலி செலுத்தினர்.

இன்று இறுதிச்சடங்கு: இதையடுத்து நேற்றிரவு ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் பசுமலைத் தேரிக்கு கொண்டு செல்லப்பட்ட உடல் அதிகாலை 6 மணிக்கு வந்து சேர்ந்தது. அவரது உடலுக்கு பொதுமக்கள், உறவினா்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். அவரது இறுதிச் சடங்குகள் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறும் என்று அவரது மகன் அகிலன் தெரிவித்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X