Ethirneechal Marimuthu: அஜித் எனக்கு பீர் எல்லாம் வாங்கித் தருவாரு.. மாரிமுத்து சொன்ன சீக்ரெட்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்கள் குடும்பத்திலேயே ஒருவராக மாறிவிட்ட மாரிமுத்து திடீரென மாரடைப்பால் மறைந்த செய்தியை பலரும் ஆரம்பத்தில் நம்பாத நிலையில், மருத்துவமனையில் இருந்து அவரது உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருப்பதை பார்த்து பலரும் கதறி அழுது வருகின்றனர்.
உதவி இயக்குநராக சினிமாவில் தனது பயணத்தை தொடங்கிய மாரிமுத்து அஜித்தின் ஆசை படத்தில் பணியாற்றிய போது நடந்த சுவாரஸ்ய சம்பவங்களை முன்னதாக பேட்டி ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ஆசை படத்தில் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர் நடிகர் மாரிமுத்து. அந்த படத்தின் சூட்டிங் என்பது நடிகர் அஜித் தனக்கு வாங்கிக் கொடுத்தார் என்பதை பேட்டி ஒன்றில் போட்டு உடைத்து இருந்தார் மாரிமுத்து.
மதுரையின் தேனி மாவட்டத்தில் ஒரு குக் கிராமத்தில் பிறந்த தன்னால் சினிமாவில் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தை விதைத்தவர்கள் எங்க ஊருக்கு பக்கத்தில் பிறந்து சென்னைக்கு வந்து சினிமாவில் சாதித்தவர்கள் ஆன பாரதிராஜா, வைரமுத்து போன்றவர்கள் தான் என அந்த பெட்டியில் கூறியுள்ளார்.
கமல்ஹாசனை விட தனக்கு நடிகர் வடிவேலு தான் சிறந்த நடிகர் என்றும் அவர் காமெடி நடிகர் மட்டுமில்லை காமெடி விஞ்ஞானி என பேசிய மாரிமுத்து இருவரும் ஒன்றாக தான் ஊரில் இருந்து ஓடிவந்து ராஜ்கிரண் சார் ஆபிஸில் ஒரே பாயில் படுத்துத் தூங்கி சினிமாவில் எங்கள் பயணத்தை ஆரம்பித்தோம் என்றார்.
நடிகர் அஜித் பற்றி கூறும் போது பொய்யாக ஒருவர் புகழ்கிறார் என்றாலே அவரது பேச்சைப் பார்த்து கண்டுபிடித்து விடுவார் அஜித், அவரை அதற்கு பிறகு பக்கத்திலேயே சேர்க்க மாட்டார். உண்மையாக பேசுபவர்களை மட்டுமே தனக்கு பக்கத்தில் வைத்திருப்பார். அப்படி ஒரு நல்ல குணம் கொண்டவர் அஜித்.

ஆசை படத்தின் சூட்டிங்கின் போது பைக்கில் தான் வருவார் அஜித். திலோத்தமா, புல்வெளி உள்ளிட்ட பாடல்களை ஊட்டியில் தான் சூட்டிங் செய்தோம். அசிஸ்டெண்ட் டைரக்டர்களான எங்களுக்கு ரகசியமாக பீர் எல்லாம் வாங்கி கொடுப்பார். என்னை பைக்கில் எல்லாம் ஏற்றிக் கொண்டு சென்றிருக்கிறார். அவரது நல்ல மனதுக்கு சினிமாவில் இப்போ அவர் அடைந்திருக்கும் உயரமே சாட்சி என அந்த பெட்டியில் மாரிமுத்து கூறியிருந்தார்.
இயக்குனர் வசந்த் உங்களையே கொடுக்கும் வசனங்களையே நடிகர்களிடம் கொடுக்கும்போது தனது பாணியில் சற்றே மாற்றிக் கொடுப்பேன் என்றும் அப்போதிலிருந்து யதார்த்தமான வசனங்கள் தான் எடுபடும் என்று நினைத்தேன், இதைத்தான் தற்போதும் சினிமா மற்றும் சீரியலில் பேசும்போது பயன்படுத்தி வருகிறேன் என்றும் கூறியவர் தற்போது கடைசியாக அடிக்கடி நெஞ்சு அடைக்குது, ஏதோ கெட்டது நடக்கப் போகுது என பேசிய வசனங்களை போலவே மறைந்து விடுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லையே என ரசிகர்கள் கண்ணீர் கடலில் ஆழ்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











