மாரிமுத்துவின் மகன் பெரிய நிறுவனத்தில் வேலை செய்கிறாரா?அம்மாவை பாத்துக்கோப்பா.. உருகும் ரசிகர்கள்!

சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் மகன் அகிலன் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைப்பார்த்து வருகிறார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆனார்.

இவர் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்திலும் வில்லன் விநாயகத்தின் வலது கையாக நடித்திருந்தார்.

Ethirneechal serial actor marimuthu son working in such a big company

நடிகர் மாரி முத்து: பேருந்து வசதியே இல்லாத மலை கிராமத்தில் இருந்து, பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று படித்தார். தமிழ் மீது இருந்த பற்று காரணமாக சென்னை வந்த அவர் வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்தார். அதன்பின் ராஜ்கிரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

மருத்துவமனையில் உயிரிழந்தார்: இதையடுத்து, இரண்டு படங்களை இயக்கிய மாரிமுத்து, வாலி படத்தில் நடிகரானார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த இரண்டு வாரமாக சினிமாவில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை வளசரவாக்கத்தில் எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்தார்.

ரசிகர்கள் அதிர்ச்சி: அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில் நடிகர் பிரசன்னா, விமல்,எஸ்ஜே சூர்யா, சென்ராயன் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்த நடிகர் நடிகைகள் மாரிமுத்துவின் உடல் அருகே கதறி அழுதுக்கொண்டு நின்றனர். இதையடுத்து, தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலைக்கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டது அங்கு அவரது உடலுக்கு மகன் அகிலன் கொள்ளி வைத்தார். இத்தனை நாள் கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்த மாரிமுத்து, நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

அம்மாவை பாத்துக்கோங்க: இந்நிலையில், நடிகர் மாரிமுத்துவின் மகனான அகிலன் மாரிமுத்து மிகப்பெரிய ஐடி கம்பெனியான Zoho என்ற நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், பல லட்சங்கள் சம்பளமாய் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் பலரும், எப்படியோ கடவுள் புண்ணியத்தில் நல்லவேலையில் இருக்கிறார்கள். அம்மாவை மட்டும் நல்லா பாத்துக்கோங்க என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X