Ethirneechal - அட அவரா நீங்க.. அந்த மாதிரி படத்தில் நடித்த எதிர்நீச்சல் நடிகர்.. ரொம்ப அநாகரிகம்
சென்னை: Ethirneechal (எதிர்நீச்சல்) எதிர்நீச்சல் சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விபுராமன் ஆபாச படத்தில் நடித்திருக்கும் விஷயம் தெரியவந்திருக்கிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் ரொம்பவே ஃபேமஸ் ஆகியிருக்கிறது. கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் இயக்கிவரும் இந்த சீரியலில் காட்சிகள், வசனங்கள், நடிகர்களின் நடிப்பு அனைத்துமே கவரும்படி இருப்பதால் தொடர்ந்து டிஆர்பியில் டாப்பில் இருக்கிறது. இது ஒரு உண்மை குடும்பத்தை தழுவி எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆதி குணசேகரன்: சீரியலின் டாப் ஹைலைட்டுகளில் ஒன்று ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான். வீட்டுக்கு மூத்தவரான அவர் தனது கட்டுப்பாட்டில் தனது தம்பிகளை வைத்திருப்பது; பெண்களை அடக்கி வைத்திருப்பது; முழுக்க முழுக்க ஆணாதிக்க சிந்தனையுடன் ஒரு விஷயத்தை அணுகுவது என கொடூரமான கேரக்டர் ஆகும். அந்த கதாபாத்திரத்தை மறைந்த நடிகர் மாரிமுத்து ஏற்றிருந்தார்.
அடுத்த ஆதி குணசேகரன்: அவர் அந்த கேரக்டரை மிகச்சிறப்பாக உள்வாங்கி நடித்து அப்ளாஸை அள்ளினார். அவருக்காகவே பலரும் அந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர். ஆனால் கடந்த மாதம் அவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை அடுத்து அடுத்த ஆதி குணசேகரனாக எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி கமிட்டாகியிருக்கிறார். அதுதொடர்பான ப்ரோமோ வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கதிர்: இந்த சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்துக்கு அடுத்து பலரது கவனத்தை ஈர்த்த கதாபாத்திரம் என்றால் அது கதிர் என்று அழைக்கப்படும் ஆதிகதிர்வேல் கதாபாத்திரம். குணசேகரனுக்கு இரண்டாவது தம்பியாக அந்த கதாபாத்திரம் வரும். அதனை நடிகர் விபு ராமன் ஏற்றிருக்கிறார். எதற்கெடுத்தாலும் கை நீட்டுவதும்; கோபக்காரராகவும்; அண்ணன் என்ன சொன்னாலும் தட்டாமல் செய்வதுமாக விபு தனது நடிப்பை செம்மையாகவே வெளிப்படுத்திவருகின்றார். குறிப்பாக தனது மனைவியை கொஞ்சமும்கூட மதிக்காதபோது சீரியல் பார்க்கும் பெண்கள் பலரும் விபுவை திட்டி தீர்க்கிறார்கள். அதுவே அந்தக் கதாபாத்திரத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆபாச படத்தில்: இந்நிலையில் விபு ராமன் குறித்து புதிய விஷயம் ஒன்று தெரியவந்திருக்கிறது. அதாவது இவர் பல வருடங்களாகவே திரைத்துறையில் போராடிவருகிறார். எதிர்நீச்சல் அவருக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்திருக்கிறது. இருந்தாலும் தன்னுடைய போராட்ட காலத்தின்போது சரியாக பட வாய்ப்பு எதுவுமே கிடைக்கவில்லை. இதனையடுத்து கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நடிக்க ஆரம்பித்தார்.
அதன்படி 2011ஆம் ஆண்டு வெளியான அநாகரிகம் என்னும் ஆபாச படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தில் வஹிதாவுக்கு கணவராக வருவார். இந்தத் தகவலைத்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து அட அவரா நீங்க கதிர் என கேள்வி கேட்டுவருகின்றனர்.


Click it and Unblock the Notifications