இந்தம்மா ஏய்.. குணசேகரன் வீட்டு சம்பந்தி இப்படி ஆட்டம் போடலாமா? எதிர்நீச்சல் ஜான்சி ராணியின் டான்ஸ்!
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் நடிகை காயத்ரி கிருஷ்ணனின் ஆட்டத்தைப் பார்த்து ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
சன் டிவி தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் எதிர்நீச்சல்.

இந்த சீரியலில் கூட்டுக் குடும்பத்தில், வாழ வரும் கதாநாயகி ஜனனி, ஆணாதிக்க குணத்தோடு இருக்கும் குணசேகரனுக்கு எதிராக எப்படி போராடுகிறாள் என்பதே கதையாகும்.
எதிர்நீச்சல்: தனித்துவமான கதையோடு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். இந்த சீரியல் சமீபத்தில் இணைந்தவர் தான் விஜே காயத்ரி. இவர் இந்த சீரியலில் குணசேகரனின் தங்கையான ஆதிரையை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும், கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அயலி வெப் தொடர்: சீரியல் மூலம் பிரபலமான காயத்ரி, அயலி என்ற வெப் தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கடவுள் நம்பிக்கை, சமூகப் பழக்கவழக்கம்,குழந்தை திருமணம் என்பன போன்ற கட்டுகளை உடைத்து லட்சியத்தை நோக்கி நடைபோடும் பெண்ணை மையமாக வைத்து அயலி தொடர் உருவாக்கப்பட்டிருந்தது. 8 எபிசோடுகள் கொண்ட இந்த சீரியல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பானது.
நச் கேள்வி: இதில் முக்கியமான ரோலில் நடித்திருந்த காயத்ரி சூப்பரான வசனம் பேசியிருந்தார். இதனால் இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருந்த காயத்ரி யார் யார்கூட அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணா யாருக்கு என்ன பிரச்சனை, அவங்க அட்ஜஸ்ட்மெண்ட் செய்துவிட்டு போனா உங்களுக்கு என்ன வந்துச்சு. அது அவளோட விருப்பம். நடிகையை பார்த்தாலே இந்த கேள்வியை தான் கேட்க தோணுதா, ஏற்கனவே நடிகைகள் நொந்து போய் இருக்காங்க என்று நச்சுனு பதில் அளித்திருந்தார்.

ஜான்சி ராணியா இது: இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணாலே மிய்யா மிய்யா பாடலுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி உள்ளார். அந்த நடனத்திற்கு லைக்குகள் குவிந்து வரும் நிலையில், இந்தம்மா ஏய்.. குணசேகரன் வீட்டு சம்பந்தி இப்படி ஆட்டம் போடலாமா? என்றும், எதிர்நீச்சல் ஜான்சி ராணியா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











