Ethirneechal: எதிர்நீச்சல் ஈஸ்வரியா இது? கனிகா வெளியிட்ட கவர்ச்சி பிக்.. குணசேகரன் மைண்ட் வாய்ஸ்?

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை கனிகா லேட்டஸ்ட்டாக இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மாடர்ன் டிரெஸ் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

"ஈஸ்வரி உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்" என ஃபைவ் ஸ்டார் படத்தில் வரும் பாடல் இன்னமும் ரசிகர்களின் ஃபேவரைட் பாடல் தான். அந்த படத்தின் மூலமாகத்தான் நடிகையாக அறிமுகமானார் கனிகா.

மாதவன் உடன் எதிரி, சேரன் உடன் ஆட்டோகிராஃப் அஜித்துடன் வரலாறு என தமிழ் படங்களில் நடித்து வந்த கனிகா தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகில் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சீரியலில் ரொம்பவே சின்சியராக நடித்து வருகிறார்.

Ethirneechal serial actress Kaniha latest hot photos gets trolled

அஜித்துக்கு அம்மா:

ஹீரோயினாக நடித்து வந்த கனிகா இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் 3 வேடங்களில் நடித்து அசத்திய வரலாறு படத்தில் ஒரு அஜித்துக்கு ஜோடியாகவும் ஒரு அஜித்துக்கு அம்மாவாகவும் அப்பவே ஹனி ரோஸ் செய்த வேலையெல்லாம் செய்து அசத்தி இருந்தார். கடந்த ஆண்டு மம்மூட்டியின் சிபிஐ 5: தி பிரைன் மற்றும் பாபன் உள்ளிட்ட படங்களில் நடித்த கனிகா தமிழில் வெப்பன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் ஈஸ்வரி:

சினிமாவை போலவே சின்னத்திரையிலும் ரியாலிட்டி ஷோ, சீரியல் என நடித்து அசத்தி வருகிறார். கடந்த ஆண்டு இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஆரம்பமான எதிர்நீச்சல் சீரியலில் பிரியதர்ஷினி, மதுமிதா உடன் இணைந்து ஈஸ்வரி எனும் கதாபாத்திரத்தில் கனிகாவும் நடித்து வருகிறார். நடிகர் குணசேகரன் கதாபாத்திரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த யூடியூப் விருது விழாவில் எதிர்நீச்சல் சீரியலுக்காக விருது வென்ற கனிகா, மறுபடியும் சீரியலில் ஏன் நடிக்கிறீங்க என பலரும் கேட்டனர். அவங்களுக்கு எல்லாம் இப்போ நான் பதில் சொல்றேன். எதிர்நீச்சல் சீரியல் ஜெயிச்சிடுச்சு என பேசி அரங்கையே அதிர வைத்தார் கனிகா.

Ethirneechal serial actress Kaniha latest hot photos gets trolled

மாடர்ன் உடையில் ஹாட்டாக:

மலையாளப் படங்களில் படு கவர்ச்சியாக நடித்து மிரட்டிய கனிகா. எதிர்நீச்சல் சீரியலில் சேலை கட்டி குடும்பப் பாங்காக நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கையில் போடப்பட்டிருக்கும் அந்த தாய் சேய் டாட்டூ தெரிய மாடர்ன் உடையில் செம ஹாட்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

லைக்குகளை கடந்து அதில், அவருக்கு குவியும் கமெண்ட்டுகள் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Ethirneechal serial actress Kaniha latest hot photos gets trolled

குணசேகரன் மைண்ட் வாய்ஸ்:

எதிர்நீச்சல் சீரியலில் நெகட்டிவ் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து இதை பார்த்தால் அவரது மைண்ட் வாய்ஸ் "ஆதி குணசேகரன் mindvoice be like - ஏம்மா ஏய் என்ன மா இது dress uh" என்பார் என கனிகாவின் போஸ்ட்டுக்கு கீழ் ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அப்படியே என்னோட காலேஜ் கிரஷ் மாதிரியே இருக்கீங்க கனிகா என்றும் அழகு செல்லக் குட்டி என்றும் சூப்பர் மேடம் என்றும் ஈஸ்வரிக்கு அன்பு முத்தங்கள் என ஹார்டின்களையும் கிஸ் எமோஜிக்களையும் ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் பறக்கவிட்டு வருகின்றனர். மலையாள ரசிகர்களும் கனிகாவுக்கு மலையாளத்தில் வர்ணித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X