எதிர்நீச்சல் தொடர் நாயகன் திருச்செல்வத்தின் புதிய யூடியூப் சேனல்.. பேரு என்ன தெரியுமா?

சென்னை: கோலங்கள், சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இயக்குனர் திருச்செல்வம் தொடர்ந்து அடுத்தடுத்த சீரியல்கள் மூலம் மாஸ் காட்டியவர். சமீபத்தில் இவரது எதிர்நீச்சல் சீரியலும் சன் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. இந்த சீரியலுக்கு அளவுக்கு அதிகமான வரவேற்பு கிடைத்தது போலவே அதிகமான விமர்சனங்களும் கிடைத்தன.

இந்நிலையில் எதிர்நீச்சல் 2 சீரியலுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளில் திருச்செல்வம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இயக்குனர் திருச்செல்வம் புதிதாக youtube சேனல் ஒன்றை துவங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதில் தன்னுடைய கருத்துக்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அடுத்தடுத்து பகிர உள்ளதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

television thiruchelvam ethirneechal serial

இயக்குநர் திருச்செல்வம்: எதிர்நீச்சல், கோலங்கள் உள்ளிட்ட தொடர்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த சீரியல் இயக்குனர் திருச்செல்வம், தான் இயக்கிய சீரியல்களில் நடிகராகவும் நடித்து மாஸ் காட்டியவர். சமீபத்தில் நிறைவடைந்த இவரது எதிர்நீச்சல் சீரியல் அதிகமான வரவேற்பையும் அதே சமயம் அதிகமான விமர்சனங்களையும் பெற்றது. இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் தற்போது திருச்செல்வம் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது புதிய youtube சேனலை திருச்செல்வம் துவங்கியுள்ளார்.

சேர் டிக்கெட் யூடியூப் சேனல்: சேர் டிக்கெட் என்று இந்த யூடியூப் சேனலுக்கு பெயரிட்டுள்ளார் திருச்செல்வம். இதில் தன்னுடைய அனுபவங்களை அடுத்தடுத்து பகிர உள்ளதாக அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். வித்தியாசமான கருத்துக்கள் அடங்கிய காணொளிகள், குறுந்தொடர்கள், பிரபலங்களுடன் நேர்காணல்கள் என அடுத்தடுத்து புதிய முயற்சிகளை இந்த யூடியூப் பக்கத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கோலங்கள் தொடர்மூலம் தன்னை சின்னத்திரையில் டைரக்டராகவும் நடிகராகவும் அறிமுகப்படுத்திக் கொண்ட திருச்செல்வம் தொடர்ந்து 20 ஆண்டுகளை கடந்து வெற்றிநடைபோட்டு வருகிறார்.

அடுத்தடுத்த சீரியல்கள்: கோலங்கள் தொடரை தொடர்ந்து அல்லி ராஜ்ஜியம், மாதவி, பொக்கிஷம், சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம், வல்லமை தாராயோ ஆகிய தொடர்களை இயக்கிய திருச்செல்வம், மீண்டும் சன் டிவிக்காக எதிர்நீச்சல் தொடரை இயக்கினார். இந்தத் தொடர் அவருக்கு சிறப்பான வரவேற்பையும் சிறந்த தொடருக்கான விருதையும் பெற்றுக் கொடுத்தது. கூடவே சர்ச்சைகளையும் அதிகமாகவே கொடுத்தது. இந்நிலையில் தற்போது அடுத்த முயற்சியாக யூடியூப் சேனலையும் அவர் துவங்கியுள்ளார். இந்த சேனலுக்கு சேர் டிக்கெட் என்று பெயர் வைத்ததற்கான காரணத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

சீரியல்கள்.. விருதுகள்: அவரது இந்த புதிய யூடியூப் சேனல் ரசிகர்களிடையே அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செல்வம் ரசிகர்களின் அன்புடன் தன்னுடைய சீரியல்களுக்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். முன்னதாக கோலங்கள் தொடருக்காக தமிழக அரசின் சின்னத்திரை விருதை இவர் பெற்றுள்ளார். தொடர்ந்து 3 பிரிவுகளில் மாதவி தொடருக்காக மைலாப்பூர் அகாடமி விருதுகளை பெற்றுள்ளார். இதேபோல இவரது எதிர்நீச்சல் தொடர் சிறந்த இயக்குநர், வசனம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் சன் குடும்ப விருதுகளை பெற்றது. இதனிடையே இவரது புதிய யூடியூப் சேனல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X