அரவாணியை ஏமாற்றிய ஆச்சரியம்

By Staff

நல்ல ரோல் தருவதாக கூறி ரூ. ஒன்றரை லட்சம் பணத்தை வாங்கிக் கொண்டு தன்னை ஏமாற்றி மோசடி செய்து விட்டதாக ஆச்சரியம் என்ற படத்தை இயக்குவதாக கூறிக் கொண்ட சஞ்சய் என்பவர் மீது ரோஸ் வெங்கடேசன் என்கிற அரவாணி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அரவாணி ரோஸ், மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரனிடம் கொடுத்துள்ள புகாரில்,

நான் ஜாபர்கான்பேட்டையில் வசிக்கிறேன். எனக்கு 24 வயதாகிறது. தி.நகரைச் சேர்ந்த சஞ்சய் என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

சஞ்சய் தன்னை திரைப்பட இயக்குநர் என்று கூறிக் கொள்வார். ஆச்சரியம் என்ற படத்தை இயக்கப் போவதாக என்னிடம் கூறினார். மேலும், அந்தப் படத்தில் எனக்கு நல்ல ரோல் தருவதாக கூறினார். இதை நம்பி அவருக்கு ரூ. 1.5 லட்சம் பணத்தைக் கொடுத்தேன்.

ஆனால் அவர் படத்தையும் எடுக்கவில்லை, எனக்கு ரோலும் கொடுக்கவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்து விட்டார்.

சரி பணத்தைக் கொடுங்கள் என்று சஞ்சயிடம் கேட்டபோது, அவர் தருவதாக கூறி விட்டு கரூருக்கு ஓடி விட்டார். என்னை ஏமாற்றி பணத்தையும் மோசடி செய்து விட்டுத் தப்பி விட்ட சஞ்சய்யைத் தேடிக் கண்டுபிடித்துப் பணத்தை வாங்கித் தர வேண்டும் என்று தனது புகாரில் கூறியுள்ளார் ரோஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X