twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜோர்டான் பாலைவனத்தில் தவிக்கும் படக்குழு.. இப்போது மீட்க சாத்தியமில்லை.. அமைச்சர் திட்டவட்டம்!

    By
    |

    சென்னை: ஜோர்டானில் சிக்கிக்கொண்ட படக்குழுவை இப்போது மீட்பது சாத்தியமில்லை என்று கேரள அமைச்சர் தெரிவித்துள்ளர்.

    Recommended Video

    வைரஸ் உங்கள் நண்பன் | V-CONNECT | FILMIBEAT TAMIL

    தமிழில், கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், காவியத் தலைவன் உட்பட பல படங்களில் நடித்தவர், மலையாள ஹீரோ பிருத்விராஜ்.

    இவர் இப்போது, ஆடுஜீவிதம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். இதை பிளஸ்சி இயக்குகிறார்.

    ஓவர் அலம்பல்.. ஜிம்முக்கு போக விஐபி டிக்கெட்டாம்.. கொரோனா கலவரத்திலும் இந்த நடிகை அடங்கலையே!ஓவர் அலம்பல்.. ஜிம்முக்கு போக விஐபி டிக்கெட்டாம்.. கொரோனா கலவரத்திலும் இந்த நடிகை அடங்கலையே!

    ஜோர்டான்

    ஜோர்டான்

    இதில் அமலா பால், வினீத் ஶ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். இயக்குனர் பிளஸ்சி, ஹீரோ பிருத்விராஜ் உட்பட சுமார் 58 பேரைக் கொண்ட இந்தப் படக்குழு கடந்த சில நாட்களுக்கு முன், ஷூட்டிங்கிற்காக ஜோர்டான் சென்றது.

    படப்பிடிப்பு நிறுத்தம்

    படப்பிடிப்பு நிறுத்தம்

    அங்குள்ள வாடி ரம் என்ற பாலைவனப் பகுதியில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான், கொரோனா தீவிரம் அடைந்தது. இந்நிலையில் இந்திய தூதரகத்தின் மூலம் சிறப்பு அனுமதி பெற்று ஏப்ரல் 10-ம் தேதி வரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ள, அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தீவிரம் காரணமாக, அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு விட்டதாக பிருத்விராஜ் தெரிவித்து இருந்தார்.

    எங்கள் கடமை

    எங்கள் கடமை

    மேலும் அதில், 'உலகம் தற்போது இருக்கும் சூழலில் எங்கள் 58 பேரை மீட்பது என்பது அதிகாரிகளின் கவலையாக இருக்காது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அது சரியானதும் கூட. எங்களைப் பற்றி அக்கறை உள்ளவர்களுக்கு, இங்கு என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிப்பது, எங்கள் கடமை. அதனால் இதைத் தெரிவிக்கிறோம்' என்று தெரிவித்து இருந்தார்.

    பிலிம்சேம்பர்

    பிலிம்சேம்பர்

    இந்நிலையில், கேரள அமைச்சர் ஏ.கே.பாலன், தற்போதைய சூழலில் ஆடுஜீவிதம் படக்குழுவை மீட்பது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளார். அவர் தனது பேஸ்புக்கில், இதுபற்றி தெரிவித்துள்ளார். அதில், இயக்குனர் பிளஸ்சி, ஜோர்டானில் இருந்து தங்களை மீட்பது தொடர்பாக கேரள பிலிம்சேம்பருக்கு இமெயில் அனுப்பி உள்ளார். அவர்களின் விசா முடிவடைவது பற்றியும் அதில் கூறி இருந்தார்.

    விமானங்கள் ரத்து

    விமானங்கள் ரத்து

    இதுபற்றி மத்திய அமைச்சர் வி.முரளிதரனுடன் பேசினேன். அப்போது விசாவை நீட்டிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் நாடு திரும்புவது சாத்தியமில்லை என்றும் சொன்னார். இதனால் அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்று ஏ.கே.பாலன் கூறியுள்ளார்.

    English summary
    Kerala Minister AK Balan asserted that the government won't be able to evacuate Mollywood star Prithviraj and ‘Aadujeevitham’ crew who are stranded in Jordan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X