பெண்களுடன் சினேகன் குத்தாட்டம் போட்ட எவனும் புத்தனில்லை!
சென்னை: எவனும் புத்தனில்லை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
வி சினிமா குளோபல் நெட்வொர்க் தயாரிப்பில் இயக்குனர் எஸ்.விஜயசேகரன் இயக்கியுள்ள திரைப்படம் எவனும் புத்தனில்லை.

இத்திரைப்படத்தில் நபி நந்தி, சரத் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக சுவாசிகா, நிகாரிகா நடித்துள்ளனர். கவுரவ வேடத்தில் கவிஞர் சினேகன் மற்றும் பூனம் கவூர் நடித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கட்டிப்பிடி வைத்தியத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற சினேகன், இப்படத்தில் 200 நடனக் கலைஞர்களுடன் மாஸ் ஆட்டம் போட்டுள்ளார். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், வேலராமமூர்த்தி, சிங்கமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் சென்னையில் வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இயக்குனர், ஆறாயிரம் அடி உயர மலைகிராமத்தில் வாழும் மக்களைப் பற்றிய கதை என்றும், அவர்களுக்கு ஆதரவாக வாழும் இளைஞன் தான் ஹீரோ எனக் கூறினார்.
அடிப்படை வசதியே இல்லாத மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடத்தியதாகவும், படம் முடியும் வரை வேறு எந்த வேலைகளும், கமிட்மெண்டுகளும் இல்லாதவர்தான் பண்ண முடியும் என்பதால், சரத் மற்றும் நபி நந்தி ஆகியோரை தேர்வு செய்து படத்திற்காக தயார் செய்தோம் எனக் கூறினார்.
இப்படத்திற்கு ராஜா சி.சேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் அர்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மரியா மனோகர் இசையில் கவிஞர் சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.


Click it and Unblock the Notifications











