ஆப்பிள் உடன் ஏவாள்.. முன்னழகு தெரிய படு கவர்ச்சியான உடையில் பிரபல நடிகை.. கேப்ஷன் தான் அள்ளுது!

சென்னை: ஷ்ரத்தா ஸ்ரீநாத்தா இது, அட நம்பவே முடியலையேப்பா.. என்கிற அளவுக்கு தாராளமாக கவர்ச்சி காட்டியபடி ஒரு போட்டோவை களமிறக்கி உள்ளார்.

Recommended Video

தமிழ்ப் பாடலுக்கு பாலிவுட் ஹீரோயின் டான்ஸ்! - வீடியோ

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இவர், மலையாளத்தில் வெளியான கோஹினூர் படத்தின் மூலம் அறிமுகமானார்.

கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

அழகும் போல்டும்

அழகும் போல்டும்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் கேமியோ ரோலில் நடித்து தமிழுக்கு அறிமுகமான ஷ்ரத்தா, விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அழகும் அறிவும் ஒருங்கே கூடிய போல்டான நடிகை இவர்.

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

கன்னடத்தில் வெளியான யூடர்ன் திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். தொடர்ந்து, தெலுங்கில் நானியுடன் ஜெர்ஸி, தமிழில் தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் போல்டான கதாபாத்திரம் என தனது நடிப்புக்குத் தீனி போடும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

வச்சு விளாசல்

வச்சு விளாசல்

போல்டான நடிகை என்றாலே புல்லட் ஓட்டும் காட்சியை, இந்திய சினிமா வைப்பது ஏனோ, என ஒரு படத்தின் காட்சிக்காக தான், பைக் ஓட்டி விழுந்த வீடியோவை போட்டு வெளுத்து வாங்கி இருந்தார். சில நாட்களுக்கு முன்னதாக, திருமணம் ஆகி விட்டால், நடிகைகள் மார்க்கெட் குறைகிறது. ஆனால், நடிகர்களை யாரும் அப்படி நினைப்பதில்லையே ஏன் என்றும் கேட்டிருந்தார்.

ஆப்பிளுடன் ஏவாள்

ஆப்பிளுடன் ஏவாள்

இந்நிலையில், தற்போது திடீரென தனது த்ரோபேக் போட்டோ ஒன்றை போட்டு ரசிகர்களை திணறடித்து இருக்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். முன்னழகை தாராளமாக காட்டியபடி இருக்கும் அந்த போட்டோவில், கையில் ஆப்பிளை வைத்துக் கொண்டு, ஆப்பிளுடன் ஏவாள் என்ற கேப்ஷனும் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இரு படங்கள்

இரு படங்கள்

நடிகர் விஷாலுடன் சக்ரா படத்திலும், நடிகர் மாதவனுடன் மாறா படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் வெளியான சக்ரா படத்தின் டிரைலரில் விஷாலுடன் இணைந்து சரிசமமாக ஆக்‌ஷனில் பின்னி எடுக்கிறார். ராணுவ வீரராக விஷாலும், போலீஸ் அதிகாரியாக ஷ்ரத்தாவும் நடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X