ஓடிடி ரிலீஸுக்குப் பின்னரும் திரையரங்குகளில் சம்பவம் செய்யும் துணிவு... இன்னும் குறையாத அஜித் வைப்!
சென்னை: அஜித்தின் ஏகே 62 பட அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர்.
இந்நிலையில், பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு திரைப்படம் இன்னும் அஜித் ரசிகர்களுக்கு பாசிட்டிவ் வைப் கொடுத்து வருகிறது.
விஜய்யின் வாரிசுக்குப் போட்டியாக வெளியான துணிவு, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து மாஸ் காட்டியது.
இதனைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான பின்னரும், துணிவு படத்திற்கு திரையரங்குகளில் அதிக ஸ்க்ரீன்கள் ஒதுக்கப்பட்டுள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பொங்கல் ரியல் வின்னர்
அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. இதனால் அஜித் - வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த துணிவு படம் மீதான எதிர்பார்ப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், பொங்கல் ரேஸில் விஜய்யின் வாரிசுடன் களமிறங்கிய துணிவு, பாக்ஸ் ஆபிஸில் மரண மாஸ் காட்டியது. மங்காத்தா படத்திற்குப் பின்னர் நெகட்டிவ் ஷேடில் நடித்திருந்த அஜித், மீண்டும் தனது பழைய ஃபார்முக்கே திரும்பினார். அஜித் - வினோத் காம்போ எதிர்பார்க்காத சக்சஸ் கொடுத்து கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டினர்.

ஓடிடியில் வெளியான துணிவு
ஷேர் மார்க்கெட், மியூச்சல் ஃபண்ட், கிரடிட் என வங்கிகளை பின்னணியாக வைத்து நடக்கும் மோசடிகளை தோலுரித்துக் காட்டியது துணிவு. அதேபோல் அஜித்தின் டார்க் டெவில் என்ற கேரக்டரும் இந்தப் படத்திற்கு பெரிய பவர்ஃபுல்லாக அமைந்தது. இந்நிலையில், திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஒரே மாதத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது துணிவு. தியேட்டர் ரசிகர்களைப் போல ஓடிடி ஆடியன்ஸும் இந்தப் படத்தை கொண்டாடித் தீர்த்தனர். இதனால் இந்தியளவில் ஓடிடி ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்துக்கு வந்து கெத்து காட்டியது துணிவு.

தொடரும் ரசிகர்கள் ஆதரவு
அதேபோல் உலக அளவிலான பட்டியலிலும் டாப் 10ல் இடம்பிடித்தது துணிவு. இந்நிலையில், ஓடிடியில் வெளியானதால் விரைவில் திரையரங்குகளில் துணிவு திரைப்படத்திற்கான ஸ்க்ரீன்கள் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நேர் எதிராக தொடர்ந்து துணிவு படத்திற்கான வரவேற்பு ரசிகர்களிடம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்போதும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 177 ஸ்க்ரீன்களில் துணிவு திரையிடப்படுவது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

வார இறுதியில் ஹவுஸ்ஃபுல்
முக்கியமாக வார இறுதிநாளான நேற்று பல ஸ்க்ரீன்களில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டுள்ளது. ரிலீஸாகி ஒரு மாதம் கடந்ததுடன், ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகிவரும் நிலையிலும் ஹவுஸ்ஃபுல் காட்சி என்பது தரமான சம்பவம் என திரை விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து அஜித்தின் துணிவு படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு கொடுத்து வருவது, திரையரங்க உரிமையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால் அஜித் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள ஏகே 62 படத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துவிட்டது.


Click it and Unblock the Notifications











