கடவுள விடுங்க.. கொரோனாவால கூட என் படம் ரிலீஸ் ஆகுறத நிறுத்த முடியாது.. பிரபல இயக்குநர் அதிரடி!
சென்னை: தன்னுடைய படம் 29ஆம் தேதி ஆன்லைனில் ரிலீஸாவதை யாராலும் தடுக்க முடியாது என பிபரல இயக்குநர் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
யாருக்கும் அஞ்சாமல் தன்னுடைய மனதில் பட்டதை பேசுவதிலும் மற்றவர்களை விமர்சிப்பதிலும் அதித துணிச்சல் காட்டுபவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
அவர் பேசும் ஒவ்வொரு கருத்துமே ஒரு விதத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி தலைப்புச் செய்தியாகி வருகிறார்.

கிளுகிளுபான காட்சிகள்
இந்நிலையில் அவரது இயக்கத்தில் தற்போது உருவாகியிருக்கும் படம் க்ளைமேக்ஸ். அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகையான மியா மல்கோவா நடித்துள்ள இப்படம் திகில் சம்பவங்கள் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

விளாசும் நெட்டிசன்ஸ்
இந்தப் படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க ஆபாச காட்சிகள் சேஸிங் சீன்ஸ் என உள்ளது படம். இதனை பார்த்த நெட்டிசன்கள் சமூகத்துக்கு பயனுள்ள படங்களை எடுங்கள் என விளாசி வருகின்றனர்.

கொரோனாவால் கூட முடியாது
இந்நிலையில் இந்தப் படத்தை ஆன்லைனில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கடவுள் என்ன.. கொரோனா கூட க்ளைமேக்ஸ் ஆன்லைனில் ரிலீஸ் ஆவதை தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

ரசிகர்கள் வாழ்த்து
க்ளைமேக்ஸ் படம் வரும் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு ராம் கோபால் வர்மா வோர்ல்டு தியேட்டரான ஷ்ரேயா செட் ஆப்பில் ரிலீஸ் ஆகும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
Recommended Video

பல ஆயிரம் கோடி இழப்பு
கொரோனா லாக்டவுன் காரணமாக தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் என ஏராளமான படங்களை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் இந்திய சினிமா பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications