»   »  மோடி மூவ்: இந்தியன், சிவாஜி, பிச்சைக்காரன் பாணியில் கணித்த விஜய்யின் கில்லி

மோடி மூவ்: இந்தியன், சிவாஜி, பிச்சைக்காரன் பாணியில் கணித்த விஜய்யின் கில்லி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஷங்கரை போன்று இயக்குனர் தரணிக்கும் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை பற்றி முன்பே தெரிந்திருக்கிறதே.

கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பு வெளியிட்டாலும் வெளியிட்டார் நாடே அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது.


Even Dharani knows about Modi's move?

அமெரிக்க அதிபர் தேர்தலாவது வெங்காயமாவது, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போச்சே என்று ஆளாளுக்கு கவலையில் உள்ளனர். இது குறித்து சமூக வலைதளங்களிலும் மீம்ஸ்கள் பறக்கின்றன.


ஷங்கரின் இந்தியன், சிவாஜி மற்றும் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தை பார்த்து மோடி இப்படி அதிரடி முடிவு எடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஷங்கருக்கு மட்டும் அல்ல விஜய்யின் கில்லி படத்தை இயக்கிய தரணிக்கும் மோடியின் முடிவு முன்பே தெரிந்திருக்கிறது போல. கில்லி படத்தில் விஜய் மதுரைக்கு கிளம்பும்போது அவரின் தந்தையான ஆசிஷ் வித்யார்த்தி பழைய 100 ரூபாய் நோட்டை கொடுத்து 100 ரூபாய்டா பார்த்து செலவு பண்ணு என்பார்.


விஜய் கடுப்பில் அந்த நோட்டை வாங்கிக் கொண்டு முணங்குவார். அந்த காட்சியின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

English summary
A picture taken from Ghilli movie is doing rounds on social media when PM Modi took an amazing action to curb black money.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil