முதல் பாகமே ரிலீஸாகல, செகண்ட் பார்ட்டுக்கு இவ்ளோ எதிர்பார்ப்பா? பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூஸிவ்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில் இருந்து 'பொன்னி நதி' என்ற முதல் பாடல் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ள 'பொன்னி நதி' பாடலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் சூட்டிங், இரண்டாம் பாகம் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி

கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவல், தமிழ் சினிமாவில் பெரும் கனவு படைப்பு என தாராளமாக சொல்லலாம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், கமல் என பலரும் 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்க வேண்டும் என முயற்சித்து, இறுதியில் ஏமாற்றத்தையே சந்தித்தனர். இயக்குநர் மணிரத்னமும், முதலில் விஜய், விக்ரம், மகேஷ் பாபு ஆகியோரை வைத்து, இந்தப் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அப்போது முடியாமல் போன 'பொன்னியின் செல்வன்' இப்போது திரைப்படமாக வடிவம் பெற்றுள்ளது.

மெகா பட்ஜெட் மெகா ஸ்டார்ஸ்

மெகா பட்ஜெட் மெகா ஸ்டார்ஸ்

மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் ஆரம்பிக்கப்பட்ட போது, இது முடியாத காரியம் என பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால், அதைபற்றியெல்லாம் கவலைப்படாமல் மெகா கூட்டணியை இந்தப் படத்திற்குள் கொண்டுவந்தார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், விக்ரம் பிரபு, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ரகுமான் ஆகியோர் கமிட் ஆகினர். அதேபோல், லைகா நிறுவனம் மெகா பட்ஜெட்டுடன் களமிறங்கியது.

சாதித்துக் காட்டிய மணிரத்னம்

சாதித்துக் காட்டிய மணிரத்னம்

'பொன்னியின் செல்வன்' சூட்டிங் தொடங்க இருந்தபோது கொரோனா லாக் டவுன் மீண்டும் இப்படம் உருவாக சிக்கலாக அமைந்தது. ஆனால், பொறுத்திருந்த மணிரத்னம், சரியாக ஸ்கெட்ச் போட்டு, 'பொன்னியின் செல்வன்' சூட்டிங்கை நடத்தி முடித்தார். முக்கியமாக மொத்தமே 120 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக, 'பொன்னி நதி' பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி பேசியது, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டாவது பாகமும் ரெடி

இரண்டாவது பாகமும் ரெடி

கார்த்தி சொன்ன அப்டேட் படி, 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் சூட்டிங் முடிந்து இப்போதே ரெடியாகிவிட்டதாகத் தெரிகிறது. இதுவரை முதல் பாகத்தின் சூட்டிங் மட்டுமே முடிந்துள்ளதாக ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், கார்த்தி கொடுத்த அப்டேட், இப்போது இரண்டாவது பாகம் எப்போது ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்க வைத்துள்ளது.

Recommended Video

Ponniyin Selvan புத்தகத்தை நெஞ்சில் சுமந்து நடிச்சோம் , JayamRavi speech | PS1 Song lauch *Kollywood
செப்டம்பரில் சோழன் வருகை

செப்டம்பரில் சோழன் வருகை

'பொன்னியின் செல்வன்' முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அதனைத் தொடர்ந்து அமேசான் ஓடிடியிலும் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தற்போது பொன்னியின் செல்வன் பின்னணி இசையில் ஏ.ஆர். ரஹ்மான் பிஸியாக இருக்கிறார். முதல் பாகத்தை முடித்துவிட்டு, உடனே இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட பணிகள் தொடங்கிவிடும் எனத் தெரிகிறது. அதனால், 'பொன்னியின் செல்வன்' 2ம் பாகம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X