சோலி முடிஞ்சு.. சொம்பெல்லாம் அடிக்க முடியாது.. விஜய் - யுவன் காம்போ செட்டாகல.. ரசிகர்களே குமுறல்!
சென்னை: இந்தியன் 2 படத்தை பெரிதும் எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு படம் வெளியானதும் பேரதிர்ச்சி காத்திருந்தது போல கோட் படம் வெளியான பிறகும் அதிர்ச்சி ரெடியாக இருக்கும் என்பதை ரசிகர்கள் இப்போதே கணிக்க ஆரம்பித்து விட்டனர்.
வெங்கட் பிரபுவை நம்பி விஜய் இந்த படத்தை கொடுத்திருக்கக் கூடாது என்றும் புதிய கீதை படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக தவிர்த்து வந்த யுவன் சங்கர் ராஜா கூட்டணியையும் விஜய் அனுமதித்திருக்கக் கூடாது என விஜய் ரசிகர்களே குமுறி வருகின்றனர்.

வெங்கட் பிரபு டைட்டிலை மட்டும் தாறுமாறாக 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என வைத்து விட்டு வெளியாகும் ஒவ்வொரு விஷயங்களிலும் இப்படி கோட்டை விட்டு வருகிறாரே என வெளுத்து வாங்கி வருகின்றனர்.
விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கல: ரஜினிகாந்த், அஜித் மற்றும் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல விஜய் ரசிகர்களுக்கே கோட் படத்தின் 3வது சிங்கிள் பாடலும் பெரிதாக கவரவில்லை என்கின்றனர். ஏற்கனவே கேட்ட அதே குத்து பாடல் மாதிரி உள்ளதாகவும் குத்து பாடலில் ஒரே பீட் தான் போட முடியும் என யுவன் சங்கர் ராஜா அளித்த பழைய பேட்டியையும் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

காரணம் இதுதான்: பாடலை ரசிக்க முடியாமல் போக மிக முக்கியமான காரணமே விஜய்யின் டீ ஏஜிங் லுக் தான் என்கின்றனர். ரொம்பவே செயற்கைத்தனமாக கார்ட்டூன் பொம்மை போலவே உள்ளதாகவும் வெங்கட் பிரபு கதையில் விஜய்யை க்ளோனிங் அல்லது ரோபோவாக காட்டினால் மட்டுமே ரசிகர்கள் இந்த லுக்குடன் ஒன்றிணைவார்கள் என்றும் மகன் விஜய்யாகவே காட்டினால் கதை கந்தலாகி விடும் என்றும் கூறுகின்றனர்.

சொம்பெல்லாம் அடிக்க முடியாது: விஜய் வெறியர்களான எங்களுக்கே இந்த பாடல் பிடிக்கவில்லை என்றும் சொம்பெல்லாம் அடிக்க முடியாது விஜய் மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ செட்டாகல அதுதான் உண்மை என்றும் தளபதி ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். இப்படியொரு முட்டுக் கொடுக்காத ரசிகர்களை பார்க்கவே வியப்பாக இருப்பதாக நெட்டிசன்கள் விஜய் ரசிகர்களை பாராட்டி வருகின்றனர்.

கோட்டுக்கு வேட்டு: 3 பாடலை வெளியிட்டதே போதும் இதற்கு மேல் யங் விஜய் லுக்கை எதிலும் காட்டாதீங்க நேரடியாக நாங்க படத்துலயே பார்த்துக் கொள்கிறோம். ஆடியோ லாஞ்ச், டீசர், டிரெய்லர் என கோட் படத்தின் காட்சிகளை காட்டி மேலும், மனசை நோகடிக்க வேண்டாம் என்றும் விஜய்யின் கடைசி படமாக கோட் மாறி விடக்கூடாது நிச்சயம் தளபதி 69 வேண்டும் என ரசிகர்கள் #Thalapathy69 ஹாஷ்டேக்கையும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்த ஃபர்னிச்சர்?: இந்த ஆண்டு ஏற்கனவே இந்தியன் 2 என்கிற பெரிய ஃபர்னிச்சர் போட்டு உடைக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், அடுத்த ஃபர்னிச்சராக கோட் படம் மாறிவிடுமோ என்கிற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியிலேயே எழுந்துள்ளது. பீஸ்ட் படம், வாரிசு படம், லியோ படம் என வரிசையாக விஜய் படங்கள் ட்ரோல் மெட்டீரியலாக மாறி வரும் நிலையில், கோட் படமும் அந்த வரிசையில் இடம் பெறுமா? அல்லது மங்காத்தா, மாநாடு போல சம்பவம் செய்யுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











