Airaa Movie :இதை நயன்தாராவே நினைத்தாலும் காப்பாற்ற முடியாது

By Siva

சென்னை: திரைக்கதை சரியில்லை என்றால் நயன்தாராவால் கூட ஒரு படத்தை காப்பாற்ற முடியாது.

சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ஐரா படம் இன்று வெளியாகியுள்ளது. யமுனா கதாபாத்திரத்தை விட பவானி கதாபாத்திரத்தில் நயன்தாரா அசத்தியிருக்கிறார்.

பவானியை தமிழ் சினிமா ரசிகர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் நயன்தாரா.

கதை

கதை

நயன்தாரா மட்டும் நடித்தால் படம் ஓடிவிடும் என்று இல்லை. லேடி சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் கதை முக்கியம். ஐராவில் கதை சொதப்பியதால் நயன்தாராவால் கூட படத்தை காப்பாற்ற முடியவில்லை. நயன்தாராவின் ரசிகர்கள் வேறு வழியில்லாமல் சூப்பர், வாவ், ஹிட் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

சொதப்பல்

சொதப்பல்

படத்தில் லாஜிக்கே இல்லை என்று விமர்சிக்கிறார்கள். நயன்தாரா எப்படி இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது. யமுனா கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இல்லை. தன்னை அசிங்கப்படுத்திய நபருக்கு பதிலடி கொடுப்பது எல்லாம் சரி, ஆனால் அதன் பிறகு அந்த கதாபாத்திரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

தேர்ச்சி

தேர்ச்சி

நயன்தாராவின் நடிப்பை குறை சொல்லவே முடியாது. நாளுக்கு நாள் அவரின் நடிப்பு மெருகேறிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அவர் நடிப்பை மட்டுமே வைத்து ஐராவை கரை சேர்க்க முடியாது. கதையில் சொதப்பியதால் நயன்தாராவுக்கு இந்த படம் கை கொடுக்காமல் போயுள்ளது.

பவானி

பவானி

பவானி கதாபாத்திரம் மூலம் வித்தியாசமான முயற்சியில் இறங்கிய நயனை பாராட்டியே ஆக வேண்டும். அந்த முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால் அது படத்தை தூக்கிவிட உதவவில்லையே. பவானி கதாபாத்திரத்தை பார்த்து பார்த்து செதுக்கிய அளவுக்கு கதையில் கவனம் செலுத்தப்படவில்லை.

ஒன்னும் இல்லை

ஐரா படம் பார்த்தவர்கள் கடுப்பாகி விமர்சிக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X