twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போதும் கூட உதவி கேட்டு தினமும் 100 அழைப்புகள் வருகின்றன.. பிரபல நடிகர் சோனு சூட் தகவல்!

    By
    |

    சென்னை: இப்போது கூட உதவிகேட்டு தினமும் நூறு போன் அழைப்புகள் வருகின்றன என்று நடிகர் சோனு சூட் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    V-CONNECT | NAPOLEON CHAT | 1997 - 1 YEAR தமிழ் சினிமாவில் ஷூட்டிங்கே நடக்க வில்லை | FILMIBEAT TAMIL

    கொரோனா காரணமாக, மத்திய மாநில அரசுகள் கடந்த மார்ச் இறுதியில் திடீரென லாக்டவுனை பிறப்பித்தன.

    யாரும் எதிர்பார்க்காத இந்த ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் நிலைகுலைந்தனர். பலர் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டனர்.

    டூவீலர் மோதியது.. பிரபல கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயி படுகாயம்.. கால் எலும்பு முறிந்தது டூவீலர் மோதியது.. பிரபல கிராமிய பாடகி கொல்லங்குடி கருப்பாயி படுகாயம்.. கால் எலும்பு முறிந்தது

    தொழிலாளர்கள்

    தொழிலாளர்கள்

    ரயில், பேருந்து, விமான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டதால், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பணம் இல்லாமலும் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் கஷ்டப்பட்டனர். இந்நிலையில், பிரபல நடிகர் சோனு சூட், அவர்கள் சொந்த ஊர் செல்ல, தனது சொந்த பணத்தைச் செலவழித்து தொடர்ந்து உதவி செய்து வந்தார். விமானம் மூலமாகவும் தனி பேருந்துகளை ஏற்பாடு செய்தும் அனுப்பி வைத்தார்.

    புகழ்ந்து தள்ளினர்

    புகழ்ந்து தள்ளினர்

    கொரோனா நோயாளிகளை காப்பாற்றப் பாடுபடும் மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஓய்வெடுக்க, தனது ஓட்டலை ஏற்கனவே கொடுத்திருந்தார் அவர். தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவும் கொடுத்து வந்தார். இதனால், நடிகர் சோனு சூட்டின் மனிதாபிமான செயலை, இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டினர். சமூக வலைத்தளங்களில் அவரை புகழ்ந்து தள்ளினர்.

    நூறு அழைப்புகள்

    நூறு அழைப்புகள்

    அவர் வில்லன் அல்ல, நிஜ ஹீரோ என்றும் அவரது மனதுக்கு நல்லதே நடக்கும் என்றும் அவர்கள் கூறினர். சோனு சூட்டின், உதவியை அறிந்த பலரும் தங்களின் சூழ்நிலையை எடுத்துக்கூறி ட்விட்டரில் தொடர்ந்து உதவி கேட்டனர். மறுக்காமல் முடிந்த உதவிகளை செய்து வந்தார். இந்நிலையில், இப்போதும் உதவிகேட்டு தினமும் நூறு போன் அழைப்புகள் வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தெரியவில்லை

    தெரியவில்லை

    கடந்த வாரம் கூட அவர் 2 ஆயிரம் பேரை உத்தராகண்டுக்கும் 2 ஆயிரத்து நானூறு பேரை பீகாருக்கும் அனுப்பி வைத்துள்ளார். அவர் கூறும்போது, மும்பை எப்போது சகஜ நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை. அதனால், பலர் இப்போதும் உதவி கேட்டு வருகின்றனர். நலசோபரா, வசாய், பால்கர் பகுதிகளில் இருந்து உதவி கேட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.

    உறவினர்கள்

    உறவினர்கள்

    அவர் மேலும் கூறும்போது, லாக்டவுன் முடிந்தபின் மும்பை திரும்ப நினைப்பவர்களுக்கும் உதவுவதற்கு தயாராக இருக்கிறோம். ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்க்கச் செல்லும்போது, அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காண்கிறேன். அவர்களுக்கு உதவ, நான் கொடுத்து வைத்திருக்கிறேன். இப்போது, பீகார், உத்தராகண்ட், ஜார்கண்ட், ஒடிசா, உத்தரபிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்களில் எனக்கு உறவினர்கள் இருப்பதாக நினைக்கிறேன்' என்கிறார் சோனு சூட்.

    English summary
    Actor Sonu Sood has been helping migrants return to their home towns by train and buses and even last week.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X