இந்த வாரம் ‘வா வாத்தியார்' வந்தாலும் அடிதான்.. வரலைன்னாலும் அடிதான்.. அகண்டா 2 வருதே பாஸ்!

சென்னை: டிசம்பர் மாதம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான கார்த்தி மற்றும் பிரதீப் ரங்கநாதன் படங்கள் வெளியாகி விடும் என்றும் கோலிவுட்டில் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 படங்களும் இந்த மாதம் வெளியாகுமா? என்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த வாரம் பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 படத்தை போல 'வா வாத்தியார்' படத்துக்கான டிக்கெட் முன்பதிவு எல்லாம் இன்று தொடங்கியது. சமீபத்தில், நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சத்யராஜ், கார்த்தி பேசியதெல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

Even Vaa Vaathiyaar release or not it will affected due to Akhanda 2 release
Photo Credit:

படத்தின் டிரைலர் ஓரளவுக்கு ஓகே ரகமாகவே உள்ள நிலையில், படம் வெளியானால் நலன் குமாரசாமி ரசிகர்களுக்கு ட்ரீட் என எதிர்பார்க்கப்படும் நிலையில், நிதி சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி வா வாத்தியார் படம் வெளியாகுமா? என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.

21 கோடி பஞ்சாயத்து: அர்ஜுன்லால் சுந்தர்தாஸிடம் 2014ம் ஆண்டு ஞானவேல்ராஜா வாங்கிய 10 கோடி கடன் தற்போது வட்டி குட்டிப்போட்டு 21 கோடியே 78 லட்சம் கொடுத்தால் தான் வா வாத்தியார் படம் வெளியாகும் என்கிற நிலையில் உள்ளது. உயர்நீதிமன்றமும் மொத்த தொகையும் செட்டில் செய்யாமல் படத்தை வெளியிடக் கூடாது என தடை விதித்துள்ள நிலையில், வா வாத்தியார் வருமா? என்பது டவுட்டு தான் என்கின்றனர். இந்த பஞ்சாயத்துக் காரணமாகத்தான் கடந்த வாரம் டிசம்பர் 5ம் தேதியும் வா வாத்தியார் வரவில்லை.

Even Vaa Vaathiyaar release or not it will affected due to Akhanda 2 release
Photo Credit:

அகண்டா 2 வருது: ஈராஸ் நிறுவனத்துடன் 14 ரீல்ஸ் நிறுவனத்துக்கும் இதே போல நிதி பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில் தான் கடந்த வாரம் வெளியாகும் என பிரமாண்ட புரொமோஷன் செய்யப்பட்ட பாலகிருஷ்ணாவின் அகண்டா 2 திரைப்படம் வெளியாகவில்லை. அந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என பாலகிருஷ்ணா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்த வாரம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

வந்தாலும் பிரச்னை.. வரலைன்னாலும் பிரச்னை: நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ள வா வாத்தியார் படம் இந்த வாரம் திட்டமிட்டபடி வெளியானால் தமிழில் வா வாத்தியார் ஓடினாலும், தெலுங்கில் அகண்டா 2விடம் சிக்கி வசூல் பாதிக்கும் என்கின்றனர். இந்த வாரம் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை என்றால், ஏற்கனவே ஸ்டூடியோ க்ரீன் மீது சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் கோபத்தில் உள்ள நிலையில், டிக்கெட் புக் செய்த ரசிகர்கள் எல்லாம் கடுப்பானால், தமிழ்நாட்டிலேயே படம் வெளியானாலும் வசூலில் பெரிய பாதிப்பை சந்திக்கும் என்கின்றனர்.

வெற்றி வாய்ப்பு: அனைத்து பிரச்னைகளையும் சரி செய்துவிட்டு இந்த வாரம் படத்தை ரிலீஸ் செய்தால், அடுத்த வாரம் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படமும் வெளியாகாத நிலையில், பொங்கல் வரை எந்தவொரு தடையுமின்றி படம் ஓடி மிகப்பெரிய வெற்றிப் பெறவும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதை மிஸ் செய்யாமல் ஸ்டூடியோ க்ரீன் பிடித்துக் கொண்டால் கோலிவுட்டுக்கு கார்த்தி மூலம் ஆண்டு இறுதியில் ஒரு வெற்றிப் படம் கிடைக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X