»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

2002ல் தமிழ்த் திரையுலகம் சில மறக்க முடியாத நிகழ்வுகளையும் சந்தித்தது. இந்த நிகழ்வுகள் பலருக்கு கசப்பான அனுபவங்களாகவும் அமைந்தது.

  • காவிரிப் பிரச்சினைக்காக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரையுலகமே ஒன்று திரண்டு, நெய்வேலியில் மாபெரும் பேரணி மற்றும் கூட்டத்தை நடத்தியது தமிழக திரையுலக வரலாற்று நிகழ்ச்சியில் மறக்க முடியாத ஒன்று.
  • காவிரிப் பிரச்சினையில் ரஜினிகாந்த் தனிமைப்படுத்தப்பட்டார். கர்நாடகத்திற்கு ஆதரவாகவும், தமிழக விவசாயிகள் நலனுக்கு விரோதமாகவும் அவர் நடப்பதாக முத்திரை குத்தப்பட்டது. ரஜினியை விமர்சித்து பேச்சுக்கள் எழுந்தன.
  • அக்டோபர் 13ம் தேதி ரஜினிகாந்த் காவிரிப் பிரச்சினைக்காக சென்னையில் தனியாக உண்ணாவிரதம் இருந்தார். அவரை வாழ்த்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்கள் திரண்டு வந்தனர். நதிகள் இணைப்புக்கு இயக்கம் தொடங்குவதாகவும் அதற்காக ரூ. 1 கோடி தருவதாகவும் அறிவித்த ரஜினி, சமீபத்தில் அதையெல்லாம் செய்யப் போவதில்லை என்று சொல்லி ஒதுங்கிகி கொண்டார்.
  • நடிகர் விஜயகாந்த் தலைமையில் சிங்கப்பூர், மலேசியாவுக்கு தமிழ்த் திரையுலகினர் ஒன்று திரண்டு சென்று மாபெரும் கலை நிகழ்ச்சியில் நடத்தி பணம் பார்த்தனர்.
  • சிம்ரனின் தங்கை மோனலின் தற்கொலைச் சம்பவத்தையடுத்து நடிகை மும்தாஜ், டான்ஸ் மாஸ்டர்கள் கலா, பிருந்தா, பிரசன்னா ஆகியோர் மீது நடிகை சிம்ரன் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மும்தாஜை திருடி என்று கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
  • சென்னையில் நடந்த பான்யன் அமைப்புக்கு நிதி சேர்ப்பதற்கான கலை நிகழ்ச்சியில் நடிகைகள் மும்தாஜும், சினேகாவும் அடிதடியில் ஈடுபட்டனர். அசிங்கமான வார்த்தைகள் சரமாரியாக இருவராலும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
  • ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே படப்பிடிப்பின்போது சினேகா உதட்டில், ஷாம் கடித்து விட்டதாகவும், அதனால் ஷாமை, சினேகா அறைந்து விட்டார் என்றும் செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஷாம் இதை மறுத்தார். இயக்குனர் வசந்த்தே இதை திட்டமிட்டு பரப்பியதாக பின்னர் கூறப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil