twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'மெட்ராஸ் கபே' நல்லாத்தானே இருக்கு... காங்கிரஸார் 'கண்டுபிடிப்பு'!

    By Sudha
    |

    சென்னை:மெட்ராஸ் கபே படத்தில் தமிழர்களுக்கு எதிரான எந்தக் காட்சியும் இல்லை. தமிழர்களை அதில் இழிவுபடுத்தவும் இல்லை. படம் நன்றாகத்தான் உள்ளது. அத்தனை தமிழர்களும் பார்க்க வேண்டிய படம் இது என்று பேசியுள்ளனர் காங்கிரஸார்.

    மெட்ராஸ் கபே படத்துக்கு எதிராக தமிழகத்தில் போர் வெடித்துள்ளது. பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மாணவர்களும் போராடி வருகின்றனர்.

    இந்த நிலையில் இந்தப் படத்தை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலருக்காக போட்டுக் காட்டியுள்ளனர் படத் தயாரிப்பாளர்கள். அதைப் பார்த்து விட்டு வந்த அவர்கள் படம் நன்றாககத்தானே உள்ளது என்று பேசியுள்ளனர்.

    இளைஞர்கள்

    இளைஞர்கள்

    தமிழக இளைஞர் காங்கிரசார் இத்திரைப்படத்தை பார்க்க சென்னை தி.நகரில் உள்ள தேவி பிரிவியூ தியேட்டரில் ஸ்பேஷல் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

    அனுராதா.. விஜய இளஞ்செழியன்

    அனுராதா.. விஜய இளஞ்செழியன்

    மாநில துணை தலைவர் விஜய இளஞ்செழியன் தலைமையில் மாநில நிர்வாகிகள் நாசே ராஜேஸ், அனுராதா அபி, விக்டரி ஜெயக்குமார் உட்பட பலர் திரைப்படத்தை பார்த்தனர்.

    அப்படியெல்லாம் இல்லையே...

    அப்படியெல்லாம் இல்லையே...

    படத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்த இளஞ்செழியன் கூறுகையில், தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் மெட்ராஸ் கபே திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக தமிழகத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் எந்த காட்சிகளும் இல்லை.

    உண்மையைத்தானே சொல்லியுள்ளனர்

    உண்மையைத்தானே சொல்லியுள்ளனர்

    உண்மை சம்பவங்கள் அடிப்படையில் கதை அமைக்கின்றனர். அந்த வகையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு படத்தை திரையிட அனுமதித்த பின்பு அதை தடுப்பது நியாயமில்லை என்றார்.

    English summary
    TN youth congress functionaries have said that every Tamil should watch Madras Cafe.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X