குழந்தை பிறந்த நாளில் 10 ஆண்டுகளாக பூஜை செய்கிறேன்..’நீயா நானா’வில் வாடகைத்தாயின் நெகிழ்ச்சி பதிவு

விஜய் டிவி 'நீயா நானா' நிகழ்ச்சியில் பங்கேற்ற வாடகைத்தாய் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தது பார்வையாளர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

குழந்தையை 10 மாதம் சுமந்தேன், ஆனால் ஆணா, பெண்ணா எனக்கூட தெரியாது. குழந்தையின் முகத்தைக்கூட காட்டவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் குழந்தைக்காக பிறந்த நாளில் கோயிலுக்குபோய் பூஜை செய்வேன் என வாடகைத்தாய் கண்ணீருடன் தெரிவித்தார்.

 உளவியல் நிகழ்வுகளை அலசும் நீயா நானா, தமிழா தமிழா

உளவியல் நிகழ்வுகளை அலசும் நீயா நானா, தமிழா தமிழா

உளவியல் மற்றும் வாழ்வியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'நீயா நானா', ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சிகளாகும். இந்த நிகழ்ச்சிகளில் எப்போதும் ஏதாவது ஒரு முக்கிய சப்ஜெக்ட்டை எடுத்துக் கொண்டு இரண்டு பிரிவாக பிரித்து விவாதம் நடக்கும். இந்த விவாதங்களில் பங்கேற்பவர்களின் வாதங்கள் சில நேரம் உருக்கமாகவும், நெகிழ்ச்சியாகவும் இருக்கும். இது சில நேரம் பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் விதமாகவும் அமைந்திருக்கும். நேற்று நீயா நானா நிகழ்ச்சியில் வாடகை தாய் பிரச்சனை குறித்த ஒரு விவாதம் நடந்தது. இதில் பங்கேற்ற வாடகைத்தாய் ஒருவர் பேசியது அனைவரின் மனதையும் உருக்குவதாக இருந்தது.

 குழந்தை இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை மறுக்க முடியுமா?

குழந்தை இல்லாதவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதை மறுக்க முடியுமா?

வாடகைத்தாய் முறை தேவை இல்லை என்கிற விவாதம் சென்றது. குழந்தையில்லாத ஒருவர் தனக்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை மறுப்பது, அதுவும் மருத்துவம் அனுமதித்த ஒன்றை மறுப்பது எப்படி சரியாக இருக்கும் என்று ஒரு பக்கமும், நீங்கள் வாடகை தாயின் மூலம் குழந்தை பெறும் பொழுது மற்றொரு நபரை தவறாக பயன்படுத்துகிறீர்கள் என்ற வாதமும் வைக்கப்பட்டது. மேலும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் குழந்தை பெற்றுக் கொடுக்கும் வாடகை தாயின் வறுமையை பயன்படுத்துகிறீர்கள் என்றும் கூறப்பட்டது. இந்த விவாதத்தின் இடையே நெறியாளர் கோபிநாத் வாடகைத்தாய் ஒருவரை நிகழ்ச்சிக்கு அழைத்து பேச சொன்னார்.

 வறுமையால் வாடகைத்தாய் ஆன பெண்ணின் கண்ணீர் கதை

வறுமையால் வாடகைத்தாய் ஆன பெண்ணின் கண்ணீர் கதை

அப்போது பேசிய வாடகைத்தாய் ஒருவர் தனக்கு நேர்ந்த அனுபவத்தை கூறினார். தான் ஆட்டோ ஓட்டுனர் ஒருவரின் மனைவி என்றும், இரண்டு பிள்ளைகள் தனக்கு இருப்பதாகவும், வறுமையான சூழ்நிலையில் கணவரின் வருமானம் போதாத நிலையில் கடன் அதிகமாகி விட்டதாகவும் அப்பொழுது தன்னை அணுகிய புரோக்கர் ஒருவர் கருமுட்டை தானம், அல்லது வாடகை தாயாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 2 லட்ச ரூபாய் தருவதாக சொன்னார், தான் அதை தனது குடும்பத்தாரிடம் தெரிவித்த பொழுது குடும்பத்தார் அதை எல்லாம் செய்ய வேண்டாம் என்று மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

 வாடகைத்தாயாக இருந்தபோது அவமானப்படுத்தப்பட்டேன்

வாடகைத்தாயாக இருந்தபோது அவமானப்படுத்தப்பட்டேன்

அதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்றபொழுது ஒரு பெண் தனக்கு திருமணம் ஆகி பத்து ஆண்டுகள் ஆகிறது குழந்தை இல்லை. தனது மாமியார் குழந்தை இல்லை என்பதை காரணம் காட்டி தனது கணவருக்கு வேறொரு திருமணம் செய்யும் முயற்சிக்கிறார் என்று அழுத பொழுது இதுபோன்ற பெண்களின் பிரச்சினைக்காக தான் என் வாடகை தாயாக நிற்கக்கூடாது என்று தான் முடிவு எடுத்ததாகவும் தெரிவித்தார். அதன் பின்னர் வாடகை தாயாக ஒரு தம்பதிக்கு இருக்க ஒப்புக்கொண்டதாக தெரிவித்தார். வாடகை தாயாக இருக்கும் முதல் ஐந்து மாதங்களில் தான் வீட்டில் இருந்த பொழுது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தன்னை மிக கேவலமாக பேசியதாகவும், தன்னையும் வாடகைத்தாயின் கணவரையும் இணைத்து கேவலமாக பேசியதாகவும் மனம் பொறுக்க முடியாமல் தான் மீதி காலத்தை மருத்துவமனையில் சென்று அங்கு விடுதியில் தங்கி விட்டதாக தெரிவித்தார். வேறு சில வாடகை தாய்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

 10 மாதம் சுமந்தேன்..ஆணா? பெண்ணா? முகத்தைக்கூட பார்க்கவில்லை

10 மாதம் சுமந்தேன்..ஆணா? பெண்ணா? முகத்தைக்கூட பார்க்கவில்லை

பிரசவ நேரத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவே குழந்தை பிரசவிக்கப்பட்டது. தான் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்தபொழுது தன்னிடம் எந்த விவரம் தெரிவிக்கப்படவில்லை, குழந்தை முகத்தை கூட தன்னிடம் காட்டவில்லை அது ஆணா? பெண்ணா? என்று கூட தன்னிடம் தெரிவிக்கவில்லை என்று கலங்கியபடி தெரிவித்தார். நான் வாடகை தாயாக இருந்தாலும் 10 மாதம் என் வயிற்றில் சுமந்த அந்த நெருக்கம் எனக்கு மனதில் ஏதோ பிசைவது போல் இருந்தது. மனதளவில் நான் கடுமையான பாதிக்கப்பட்டேன் என்று தெரிவித்தார்.

 குழந்தையின் பிறந்த நாளில் கோயிலில் பூஜை செய்து வருகிறேன் வாடகைத்தாயின் நெகிழ்வு பதிவு

குழந்தையின் பிறந்த நாளில் கோயிலில் பூஜை செய்து வருகிறேன் வாடகைத்தாயின் நெகிழ்வு பதிவு

10 ஆண்டுகளில் குழந்தை பற்றி உங்களுக்கு ஏதாவது தெரிந்ததா? என்று கேள்வி எழுப்பினார் கோபிநாத். எனக்கு எதுவுமே தெரியாது, குழந்தை பிரசவம் ஆனதோடு வந்ததுதான் என்று தெரிவித்தவர், ஆனால் என் வயிற்றில் பிறந்த அந்த குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை பிறந்த மே 16 அன்று ஆண்டுதோறும் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று அந்த குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வேண்டி கொண்டு பூஜை செய்து வருகிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதார். என்னதான் நவீன அறிவியலாக இருந்தாலும் குழந்தை பிறப்பு என்பது ஒரு தாய்க்கும் குழந்தைக்குமான தொப்புள் கொடி உறவு என்று சொல்வார்கள். தாய்மையின் மகத்துவம் தான் அது.

 என்னதான் வாடகைத்தாய் என்றாலும் தாய்மை உணர்வு மனதை பிசைகிறது

என்னதான் வாடகைத்தாய் என்றாலும் தாய்மை உணர்வு மனதை பிசைகிறது

என்னதான் குழந்தையின் கருமுட்டையை வேறு ஒருவருக்கு அது சொந்தமாக இருந்தாலும் தன் வயிற்றில் சுமந்ததால் ஏற்பட்ட அந்த பாசம் இன்றளவும் தன்னால் மறக்க முடியவில்லை என்று அந்த தாய் நெகிழ்ச்சியுடன் கூறியது, ஆயிரம் அறிவியல் வளர்ச்சிகள் இருந்தாலும் தாய்மை உணர்வு சம்பந்தப்பட்ட விஷயமாக இதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும். வாடகை தாயின் இந்த நெஞ்சை உருக்கும் பதிவை கேட்ட அரங்கில் இருந்தவர்கள் கண்ணீர் விட்டனர். வாடகை தாய் முறைக்கு எதிராக பேசிய ஒரு பெண்ணின் கண்களில் கண்ணீர் வடிவதை பார்த்த கோபிநாத் என்னம்மா இவ்வளவு வேகமா பேசுனீங்க இப்போ உங்க கண்ணுல கண்ணீர் ஆறாக ஓடுது? என்று கேட்ட பொழுது என்னன்னு தெரியல சார் என்னால் கண்ணீரை அடக்கவே முடியவில்லை என்று அவர் கண்ணில் நீர் வழிய தெரிவித்தார். அதன் என்ன வகையான உணர்வு. விளக்க முடியாது.

 வறுமை நிலையில் உள்ளவர்களை வாடகைத்தாயாக தேர்வு செய்கின்றனர்-கோபிநாத்

வறுமை நிலையில் உள்ளவர்களை வாடகைத்தாயாக தேர்வு செய்கின்றனர்-கோபிநாத்

அப்போது பேசிய கோபிநாத் இதுதான் உண்மை. வாடகை தாயாக ஒரு குழந்தையை சுமந்தவருடைய மனநிலையை இங்கு இவர் பிரதிபலித்ததை பார்த்தோம், இதே போல் இவர்கள் வறுமையில் இருப்பவர்களை தான் வாடகை தாயாக தேர்வு செய்கிறார்கள். அதே நேரம் வாடகைத்தாயாக வருவதில் வசதி உள்ளவர்களோ, மத்திய தர வர்க்கத்தினரோ ஒப்புக்கொள்வதில்லை. அவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளவர்களை அவர்கள் வறுமையை பயன்படுத்தி தான் வாடகை தாயாக ஒப்புக்கொள்ள வைக்கிறார்கள் என்பது உண்மை என்று தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X