சிவகார்த்திகேயனுக்கு அடையாளம் கொடுத்தது தனுஷ் தான்னு எல்லாருக்கும் தெரியும்.. கோடங்கி ரியாக்‌ஷன்!

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென் நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படம் ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வருகிறது. அதனை முன்னிட்டு அந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில், நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த ஆண்டு தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு போட்டியாகவே சிவகார்த்திகேயன் தனது அயலான் படத்தை ரிலீஸ் செய்தார். ஆனால், இரண்டு படங்களும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் போய் விட்டன.

Sivakarthikeyan Dhanush Kottukaali

சமீபத்தில், தனுஷ் இயக்கி நடித்த அவரது 50வது படமாக வெளியான ராயன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில், அந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்திருந்தார் தனுஷ்.

நான் அப்படி சொல்ல மாட்டேன்: என்னை வளர்த்து விட்டேன், வாழ வைத்தேன் என மற்றவர்கள் சொல்வது போல நான் யாரையும் சொல்ல மாட்டேன். சூரி அண்ணன் நடித்த கொட்டுக்காளி திரைப்படம் ஓடி லாபம் வந்தால் அந்த பணத்தை படத்தின் இயக்குநர் வினோத்ராஜுக்கு அட்வான்ஸாக கொடுத்து விடுவேன். அடுத்த படம் எடுக்க, மேலும், வசூல் வந்தால் வினோத்ராஜ் போலவே இன்னும் சில இயக்குநர்களை கண்டுபிடித்து அவர்களை வைத்து தரமான படங்களை கொடுப்பேன் என்றார்.

தனுஷ் ரசிகர்கள் தாண்டவம்: சிவகார்த்திகேயனின் இந்த பேச்சு நேற்று தீயாக பரவிய நிலையில், தனுஷ் ரசிகர்கள் கொந்தளித்து தாண்டவமே ஆடி விட்டனர். தனுஷ் இல்லை என்றால் சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய ஸ்டாராக ஆகியிருக்க முடியாது. எதிர்நீச்சல் என்கிற படம் வரவில்லை என்றால், சாதாரண ஹீரோவாகத்தான் சிவகார்த்திகேயன் இருந்திருப்பார் என திட்டித் தீர்க்க தொடங்கி விட்டனர்.

Sivakarthikeyan Dhanush Kottukaali

கோடங்கி கருத்து: மூத்த பத்திரிகையாளரான கோடங்கி இதுதொடர்பாக பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சிவகார்த்திகேயனை அடையாளப்படுத்தியது தனுஷ் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால், சிவகார்த்திகேயன் யாரையும் குறிப்பிட்டு குறிப்பாக தனுஷ் பெயரை குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், ரசிகர்களுக்கு அது தெளிவாக புரிந்து விட்ட நிலையில், தான் பலரும் சோஷியல் மீடியாவில் இதனை விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர் என்றார்.

தொடரும் மோதல்: தனுஷிடம் இருந்து வெளியேறிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆகியும் இதை பற்றியே பேசி வருவது புரமோஷன் யுக்தி தான் என்றும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. தனுஷ் படத்துடன் போட்டியாக படங்களை வெளியிடுவது உள்ளிட்ட மோதல்கள் இருவர் மத்தியிலும் தொடர்ந்து வெடித்து வருகிறது என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X