»   »  அஜீத்தின் "வலையில்" சிக்கிய புதிய "மீன்"!

அஜீத்தின் "வலையில்" சிக்கிய புதிய "மீன்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் ஒரு பெரிய நடிகர் மட்டுமல்ல.. செமத்தியான சமையல் கலைஞர் என்பதும் பழைய செய்திதான். ஆனால் அஜீத்தின் வாசமான சாப்பாட்டுக்கு அடிமையானவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார் இந்தி திரையுலகைச் சேர்ந்த வில்லன் நடிகர் கபீர் சிங்... அவரது சாப்பாட்டை சாப்பிடாமலேயே!

என்னை அறிந்தால் வெற்றிப்படத்தைத் தொடர்ந்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படமொன்றில் நடித்து வருகிறார் நடிகர் அஜீத். இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமிமேனனும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகிறார் கபீர் சிங்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் முடிந்து, தற்பொது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில், அஜித் மற்ரும் கபீர் சிங் சம்பந்தப் பட்ட காட்சிகள் படமாக்கப் படுகின்றன.

இந்நிலையில், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து கபீர் சிங் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது :-

வைரம் போன்றவர்...

வைரம் போன்றவர்...

அஜித்தை தற்போதுதான் சந்தித்துள்ளேன். அவர் ஒரு ஜென்டில்மேன், அற்புதமான மனிதர், வைரம் போன்றவர்.

நிஜ ஹீரோ...

நிஜ ஹீரோ...

நிஜ வாழ்க்கையில் ஹீரோ, ஒழுக்கத்தின் மறு உருவம், உதவுவதில் சிறந்தவர். அஜித்தை பொருத்தவரை இயக்குனர், கேமராமேன், லைட்மேன் படக்குழுவினர் அனைவரையும் சமமாகப் பார்க்கக் கூடியவர்.

கடவுள்...

கடவுள்...

அஜித் கோலிவுட்டின் பெரிய நடிகர் மட்டுமல்ல கோலிவுட்டின் கடவுளாகவும் திகழ்கிறார். தமிழ் சினிமாவில் பெரிய படத்தில் சிறந்த அறிமுகம் கொடுத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

செம சாப்பாடு

செம சாப்பாடு

12ம் தேதி அஜீத் தனது கையால் யூனிட்டில் இருந்தவர்களுக்கு மீன் குழம்பு வைத்துத் தந்தார். அத்தனை பேரும் ருசித்துச் சாப்பிட்டனர். அவர் நன்றாக சமைப்பார் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

என்னால் சாப்பிட முடியாமல் போய் விட்டது

என்னால் சாப்பிட முடியாமல் போய் விட்டது

நான் மீன் சாப்பிடுவதில்லை. எனவே என்னால் சாப்பிட முடியாமல் போய் விட்டது என நெகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார் கபீர் சிங்.

அனிருத் இசையில்...

அனிருத் இசையில்...

இன்னும் பெயரிடப்படாத இப்படம் ‘தல 56' எனக் குறிப்பிடப் பட்டு வருகிறது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thala Ajith’s culinary skills are a known factor in the Tamil film industry. Currently he is shooting for his 56th film in Chennai being directed by Siruthai Siva.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil