எனக்கு நடந்த கொடுமையை தட்டிக் கேட்க ஆளில்லையே: விஷால் ஹீரோயின் குமுறல்
மும்பை: நான் பாலியல் தொல்லைக்கு ஆளானபோது ஒருவர் கூட வாய் திறக்கவில்லையே என்று நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா தமிழில் விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர். கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்தவர் தற்போது மும்பை திரும்பியுள்ளார்.
சினிமா பற்றி அவர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தனுஸ்ரீ
பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக தெரிவிக்கும் #MeToo இயக்கம் இந்தியாவில் ஏன் துவங்கவில்லை என்று மக்கள் கேட்கிறார்கள். 2008ம் ஆண்டு எனக்கு நடந்தது போன்று நடக்கும் கொடுமைகளை நாம் கண்டுகொள்ளும் வரை இந்தியாவில் #MeToo-க்கு இடமே இல்லை. பாலியல் தொல்லை குறித்து தனுஸ்ரீ தத்தா பேசினார். அதன் பிறகு அவர் காணாமல் போய்விட்டார் என்றே மக்கள் நினைக்கிறார்கள்.

மக்கள்
எனக்கு என்ன நடந்தது என்பது ஒட்டுமொத்த திரையுலகிற்கும் தெரியும். ஆனால் ஒருவர் கூட அதை கண்டிக்கவில்லை. எனக்கு நடந்த கொடுமை குறித்து நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். 3 நாட்களாக தேசிய சேனல்களில் நியூஸ் ஓடியது. இருப்பினும் இன்று வரை அனைவரும் அமைதி காக்கிறார்கள். இவர்களை எப்படி நம்ப முடியும். இவர்கள் தான் பெண்களின் முன்னேற்றத்திற்காக குரல் கொடுப்பவர்களாம் என்கிறார் தனுஸ்ரீ.

நடிகர்
ஹார்ன் ஓகே படத்தில் ஒரு பாடலுக்கு ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று தனுஸ்ரீயிடம் தெரிவித்துள்ளனர். அப்போது நடிகர் நானா படேகர் சம்பந்தமே இல்லாமல் வந்து தனக்கு ஸ்டெப்ஸ் சொல்லிக் கொடுக்கிறேன் என்ற பெயரில் அத்துமீறியதாக தனுஸ்ரீ கடந்த 2008ம் ஆண்டு புகார் தெரிவித்தார். நானா படேகர் அத்துமீறியதால் அதிர்ச்சி அடைந்த தான் 90 நிமிடங்கள் கேரவனுக்குள் இருந்ததாக அவர் அப்போது தெரிவித்தார்.

விளக்கம்
அந்த சம்பவத்திற்கு பிறகு தனுஸ்ரீ படத்தில் இருந்து விலகிவிட்டார். அவருக்கு பதில் ராக்கி சாவந்த் அந்த பாடலுக்கு குத்தாட்டம் போட்டார். தனுஸ்ரீ தனது மகள் வயது பெண் என்றும், அவர் ஏன் தன் மீது அப்படி ஒரு புகார் தெரிவித்தார் என்று தெரியவில்லை என்றும் நானா படேகர் தெரிவித்திருந்தார். காலா படத்தில் வில்லனாக வந்து மிரட்டியவர் நானா படேகர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











